Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 11, 2016

தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப மஹா காளி யாகம்.இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று காலை 8.00 மணிக்கு கோபூஜை, விநாயகர் பூஜை, கலச பூஜையுடன் லட்ச ஜப மஹாகாளி யாகம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகன் ஆசிகளுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் மழை வேண்டியும் உலக மக்களின் நலன் கருதியும் இயற்கை வளம் வேண்டியும் கிராம தேவதைகளின் அருள் வேண்டியும் பஞ்சபூதங்களின் அருள் வேண்டியும் மஹா காளி யாகத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.அதற்கு முன்பாக மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த யாகத்திறகு 6*10 அடி அகலத்தில் 4 அடி ஆழத்தில் பிரத்தியேகமாக மஹா குண்டம் அமைக்கப்பட்டது. 27 கலசங்கள் அமைத்து பூஜையானது துவங்கப்பட்டது. இந்த யாகம் 13.12.2016 செவ்வாய் கிழமை பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் முடிவடையும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment