வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா,
06.09.2023 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கோகுலாஷ்மியை முன்னிட்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மகா அபிஷேக, ஆராதனைகளுடன், ஸ்ரீ கிருஷ்ண யாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கிருஷ்ணருக்கு வெண்ணெய் , சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு உள்ளிட்டவற்றை வைத்து நிவேதனம் செய்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை, சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற உள்ளது.
விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஹோம பிரசாதங்களை வழங்கினார்.
.jpeg)
%20(1).jpeg)
No comments:
Post a Comment