Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 8, 2022

CAR FESTIVAL , PIRATHOSAM at SRI DANVANTRI AROKYA PEEDAM

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  48 விநாயகர் சிலைகள் விஜர்சனம் 

தேர்த்திருவிழா, பிரதோஷ பூஜை 

வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி , திருவாதிரை முதல் திருவோணம் நட்சத்திரம் வரை ( 16நாட்கள் )  தினசரி  காலை 10 மணி முதல் 11.30 மணிவரை ஆயுள்,ஆரோக்கியம்,குடும்ப ஷேமம், தொழில்,வியாபாரம் வேண்டியும் போன்ற பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாபெரும் சிறப்பு தன்வந்திரி ஹோமங்களுடன் காரிய சித்தி ஹோமங்கள் தொடர்ந்து 16 நாட்கள்  நடைபெற்று வந்தது. இந்த  ஹோமங்கள் இன்று  8.9.2022 வியாழக்கிழமை நிறைவு பெற்றது. முன்னதாக இன்று 8.9.2022 காலை ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீசுதர்சன ஹோமமும் நடைபெற்றது.

விநாயகர் சிலைகள் விஜர்சனம்

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டும், உலக மக்கள் நலன் கருதி  கடந்த  31.8.2022ம்தேதி,  27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும் ,9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம்  48 ஹோம குண்டங்கள் அமைத்து, 48 விநாயகர் சிலைகள்  வைத்து   தன்வந்திரி குடும்பத்தினர், சேவார்த்திகள்,  பக்தர்கள், பொதுமக்கள் என மொத்தம் 48 பேர் அமர்ந்து  நடத்திய  மாபெரும் 48 மஹா கணபதி ஹோமங்கள் நடைபெற்றது.  விநாயகர் சதுர்த்தி அன்று ஹோம குண்டங்களின்  முன்பு வைக்கப்பட்ட 48 விநாயகர் சிலைகள் விஜர்சன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

தேர்த்திருவிழா

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட  தேரில்  பஞ்சலோக விநாயகர் மற்றும் விநாயகர் சதுர்த்தி இன்று  வைத்து வழிபட்ட  அனைத்து விநாயகர்களுக்கும் வைத்து  சிறப்பு பூஜை செய்யப்பட்டு  தேரில் வைத்து  ஸ்ரீ தன்வந்திரி பீட வளாகத்திற்குள்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகள்தாமரைக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.  பக்தர்கள்  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட ரதத்தை  இழுத்து வந்து கர்ம வினைகள்  நீங்கவும், காரிய தடைகள் அகலவும்  வழிபட்டு சென்றனர்.  

 பிரதோஷ பூஜை 

 பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும்,  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கும்  பஞ்ச திரவியங்களுடன்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  உள்ள ஸ்ரீ மரகதேஸ்வரர்  பீடத்திலேயே நந்தி பகவானும் இடம் பெற்றுள்ளது ,ஒரே நேரத்தில் சிவனையும், நந்தி பகவானையும் வழிபடும் வாய்ப்பாக அமைந்ததாகவும், இந்த சிறப்பு வேறு எங்கும் இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

 பூஜையில் கலந்து கொண்ட  பொதுமக்கள், பக்தர்களுக்கு   யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.










No comments:

Post a Comment