Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 13, 2019

Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Yagam - Santhana Gopala Yagam - Ekaroopa Rahu Kethu Annabhishekam - 468 Siddhargal Pooja

தன்வந்திரி பீடத்தில்திருமணத்தடை நீக்கும் யாகங்களும்ஏகரூப ராஹு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணைத்தடை நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை வரம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது.

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தபட்டது.

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ராஹு கேது தோஷங்கள் விலகவும், அன்னதோஷங்கள் அகலவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஏகரூப ராஹு கேதுவிற்கு அனாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த ஹோம பூஜைகளில் பங்கேற்ற நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










No comments:

Post a Comment