கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Wednesday, October 30, 2019
Bala Tripurasundari Prathishta - 1008 Sumangali Pooja - Koti Japa Maha Sudarsana Danvantri Drishti Durga Homam Poorthi Vizha
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலயம்மஹா கும்பாபிஷேகத்துடன்1008 சுமங்கலி பூஜை.
நவம்பர் 1 முதல் 3 வரை நடைபெறுகிறது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
59 வது ஜெயந்தியை முன்னிட்டு
வருகிற ஐப்பசி
17
ஆம்
தேதி 03.11.2019
ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதி, உத்திராட நக்ஷத்திரம்,
அம்ருதயோகம் கூடிய சுப லக்னத்தில் உதயாதி நாழிகை 13.53
க்கு மேல் 15.13 க்குள்
( காலை 11.00 மணி முதல்
11.50
மணிக்குள்)
மகர லக்னத்தில் ஸ்ரீ பாலா ஆலய மஹா கும்பாபிஷேகம் சென்னை – 42, ஸ்ரீ
லலிதாஸமிதி மோகன் குருஜி அவர்கள் வழிகாட்டுதல்ப்படி 40 க்கும்
மேற்பட்ட ஸ்ரீ வித்யா உபாசகர்களை கொண்டு நடைபெறுகிறது.
ஸ்ரீபாலா
திரிபுரசுந்தரி :
சித்தர்கள்
தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும்,
ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள்.
சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.
ஸ்ரீ
பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவத்துடன் கோடி ஜப
மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்திவிழாவும், 1008 சுமங்கலி
பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நடைபெற உள்ளது.
யாகசாலை
பூஜைகள் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல்ப்படி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி
நிரல்
01.11.2019
வெள்ளிக்கிழமை
காலை
6.00 மணி
முதல் 10.00 மணி
வரை : மங்கள இசை, கோ பூஜை, விக்நேஸ்வர பூஜை, அனுக்ஞை,
ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்.
மாலை
5.00 மணி
முதல் இரவு 8.00 மணி
வரை : வாஸ்து ஹோமம், புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம்,
ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக
பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
02.11.2019
சனிக்கிழமை
காலை
7.00 மணி
முதல் 10.30 மணி
வரை : மங்கள இசை, கோ பூஜை, 2
ஆம்
கால பூஜை, சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, நேத்ரோன் மீலனம், அஷ்ட பந்தன
சமர்ப்பணம், பிரசாதம் வழங்குதல்.
மாலை
5.00 மணிக்கு
: வேலூர் ஸ்ரீ கிருஷ்ண கலா மந்திர் மாணவிகளின் பரதநாட்ய
நிகழ்சி.
மாலை
6.30 மணிக்கு
: மங்கள இசை, 3 ஆம்
கால பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி.
03.11.2019
ஞாயிற்றுகிழமை
காலை
7.30 மணிக்கு
: மங்கள இசை, கோ பூஜை, 4
ஆம் கால பூஜை, ஹோமம், ஸ்பர்சாஷிதி.
காலை
9.00 மணிக்கு
: 59 தம்பதிகள்
பங்கேற்கும் தம்பதி பூஜை.
காலை
10.00 மணிக்கு
: 1008
சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை, குரு பெயர்ச்சி மஹா யாகம்.
காலை
11.12 மணி
முதல் 11.50 மணிக்குள்
: நாடிசந்தானம், பூர்ணாஹுதி, யாத்ராதானம், மகர லக்னத்தில்
மஹாகும்பாபிஷேகம், பிரசாதம் வழங்குதல்.
காலை
11.50 மனிக்கு
: 200 பெண்கள் பங்கேற்கும்
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்.
மதியம்
1.30
மணிக்கு : அன்னதானம்
நடைபெறும்.
மாலை
3.00
மணிக்கு : திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சூக்த பாராயணங்கள், ஸ்வாமிகளிடம் அருளாசியுடன் அருட்பிரசாதம் பெறுதல்.
மாலை
5.00
மணி முதல் 6.00
மணி வரை : 108 தவில் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் இசை சங்கமம்.
மாலை
6.00
மணி முதல் 7.30
மணி வரை : கோடி
ஜப சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா ஹோமம் பூர்த்தி விழா.
பக்தர்கள்
அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன்
அழைக்கின்றோம். மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள்
நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், மளிகை பொருட்கள்,
ஆச்சாரிய வஸ்திரங்கள், பூர்ணாஹுதி வஸ்திரங்கள்,
சமித்துகள் அளித்து குடும்பத்தினருடன் இறைகைங்கரியத்தில் ஈடுபடலாம்.
இந்த யாகத்திற்கு பல்வேறு இடங்களிலிருந்து மடாதிபதிகள், சாதுக்கள், ஸ்ரீ வித்யா உபாசகர்கள்
மற்றும் தொழிலதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க
உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Tuesday, October 29, 2019
Guru Peyarchi Maha Yagam 2019
தன்வந்திரி பீடத்தில் இன்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் அருளானைப்படி குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நேற்று 28.10.2019 திங்கள்கிழமை
மாலை 4.00 மணியளவில் பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. இன்று 29.10.2019 செவ்வாய்கிழமை
மஹா கணபதி ஹோம்ம், நக்ஷத்திர ஹோமம், நவக்கிரக ஹோமம், ராசி பரிகார ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு,
இன்று (29ம் தேதி) அதிகாலை 3.18
மணிக்கு பிரவேசித்தார். அதையொட்டி, வாலாஜாபேட்டை
- சோளிங்கர் சாலையில் கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ
மேதா தக்ஷிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சி விழா குரு சாந்தி ஹோமம்
நடந்தது. தொடர்ந்து நெய், பால், தயிர்,
தேன், இளநீர், விபூதி,
பன்னீர் என 20 வகையான பொருட்களால்
சுவாமிக்கு அபிஷேகத்துடன் 10 க்கும் மேற்பட்ட புஷ்பங்களால் புஷ்பாஞ்சலியும், அதனை
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு
சொர்ண யந்திரம், தன்வந்திரி டாளர், புகைப்படம், விபூதி, குங்குமத்துடன் ஹோம
ரக்ஷையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Sunday, October 27, 2019
Sri Danvantri Perumal Doctor Alangaram
மருத்துவர் கோலத்தில் மருத்துவ கடவுள்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டையில் கீழ்புதுப்பேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் காக்கும் கடவுளும்,
நோய் தீர்க்கும் மருத்துவ கடவுளுமான ஸ்ரீ தன்வந்திரி பகவான் மூலவராக 8 அடி
உயரத்தில் பிரதிஷ்டை செய்யட்டுள்ளது. இவருடன் 78 விதமான
பரிவார தெய்வங்களும், சிவலிங்க ரூபமாக 468 சித்தர்களுக்கும்
திருச்சன்னதிகள் அமைத்து உலக நலன்கருதி பல்வேறு வகையான யாகங்களும் பூஜைகளும், லக்ஷார்ச்சனைகளும்,
அபிஷேக ஆராதனைகளும் அந்தெந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில் தன்வந்திரி பீடத்தில்
ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று வருகிறது.
அந்த
வகையில் தீபாவளி மற்றும் தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன்
1008 கலச
தீர்த்த திருமஞ்சனமும், அன்னபூரணி, குபேர லக்ஷ்மி, மஹ ப்ரத்யங்கிரா தேவிக்கு விசேஷ ஆராதனைகளும் அமாவாசையை முன்னிட்டும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மருத்துவ கடவுளான தன்வந்திரி பகவான், மருத்துவர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு
தரிசனம் வழங்கினார். தொடர்ந்து நெய், மிளகு, சுக்கு, திப்பலி கொண்டு தயாரித்த தீபாவளி
லேகியம் சர்வ ரோக நிவாரண பிரசாதமாக பக்தர்களுக்கு ஸ்வாமிகள் வழங்கி ஆசிர்வதித்தார்.
இந்த பிரசாதம் வருகிற 29.10.2019 செவாய்க்கிழமை
வரை வருகை புரியும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று
ஒரு சில மணி நேரம் மட்டும் மருத்துவர் அலங்காரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவான் தரிசனம்
அளிப்பார். அந்த வகையில் இந்த ஆண்டும் மருத்துவர் கோலத்தில் தரிசனம் அளித்தார். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Vastu Day - Vastu Dosha Nivarthi Homam - Ashtadik Palakar Pooja
தன்வந்திரி பீடத்தில்வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும்அஷ்டதிக் பாலகர் பூஜையும்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி
வருகிற 28.10.2019 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் அஷ்டதிக்
பாலகர் பூஜையும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக,
ஆராதனைகள் நடைபெற உள்ளது.
அஷ்டதிக்
பாலகர்கள் :
அஷ்டதிக்
பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள்
என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டம் என்றால்
எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள்
என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு
ஆகியவை எண்திசைகள் ஆகும். இந்த
எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன்
விளங்குகின்றனர்.
அஷ்டதிக்
பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று
கருதப்படுகிறது. மேலும் இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாகவும்
இருப்பதாகவும் இந்துமதத்தில் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும்
கிடைப்பதாக கருதப்படுகிறது.
வாஸ்து புருஷன் :
அந்தகன் என்கிற
அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின்
நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக
மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான 53 தேவதைகளை
வசிக்கும்படி பணித்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து பகவான்
பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே
விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும்
நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி
சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை
கிடைக்கும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வாஸ்து பகவானையும், அஷ்டதிக் பாலகர்களையும்
வேண்டி நடைபெறும் இந்த ஹோமத்திலும் பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன்
குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Subscribe to:
Posts (Atom)