Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 17, 2019

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு யாகம் .




வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
பாரத பிரதமர் நரேந்திர மோடி
அவர்களின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு
புதிய இந்தியாவை உருவாக்க சிறப்பு யாகங்கள்
 பிரார்த்தனைகள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சங்கடஹர சதுர்த்தி திதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு யாகங்கள் – பிரார்த்தனைகள் இன்று 17.08.2019 செவ்வாய்கிழமை காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை மஹா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ பிரத்திங்கராதேவி மற்றும் மஹிஷாசுரமர்தினிக்கு  சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

நாட்டின் முன்னோடியான பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் மிக பெரிய தலைவரும், அறிவுபூர்வமானவரும் , தீர்க்கமானவரும் ஆவார். அவர் நல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் தாம் என்னும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் நாட்டு மக்களின் ஆதரவுடன்  புதிய இந்தியாவை உருவாக்க தன்வந்திரி பெருமாளையும் ,பாரத மாதாவையும் இதர 76 பரிவரமூர்த்திகளையும்      நரேந்திர மோடி ஜி அவர்களின் 69 வது பிறந்த நாளில் பிரார்த்திக்கின்றோம் என தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment