தன்வந்திரி பீடத்தில்நவதுர்கா யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 29.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 1.00 மணி வரை நவதுர்கா
யாகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை ஆவணி அமாவாசையை முன்னிட்டு நவ சண்டி யாகம் நடைபெற
உள்ளது.
இந்த யாகம் கோபூஜை, புண்ணியகவாசனம், யாகசாலை பூஜை, வேத பாராயணம், மங்கள
வாதியம், நவாவரண பூஜை, நவ துர்கா பூஜையுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் விசேஷ
மூலிகைகள், பழங்கள், பட்டி வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், நவசமித்துகள்,
நிவேதன பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் சென்னை திருமதி.
சித்ரா தேவராஜ் குழுவினர்களின் ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ துர்காஸூக்தம், ஸ்ரீ தேவிமஹாத்மியம்,
ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகம் பாராயணங்கள் நடைபெற்றது.
மேலும்
இதில் சென்னை திரு. பாஸ்கர் குடும்பத்தினர்கள், சென்னை திரு. பிரகாஷ் குடும்பத்தினர்கள்,
ஊட்டி திரு. ராஜசேகர், சென்னை டாக்டர். ரங்கராஜன், ஹைதெராபாத் திருமதி. ராதா, சென்னை
திருமதி. இன்பவல்லி, சென்னை திருமதி. சுபத்ரா மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற
பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment