Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 30, 2019

Sani Santhi Homam


சனி தோஷம் நீக்கும் 
சனி சாந்தி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்களின் நலனுக்காக வருகிற 01.06.2019 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ள ஸ்ரீ மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு சாந்தி பூஜைகளும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமை, சனி கிரக ப்ரீதிக்காக சனி சாந்தி ஹோமம் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 27 நட்சத்திரங்களுக்கும், 9 நவகிரகங்களுக்கும் விருட்சங்கள் கொண்டு காலச்சக்ர கோயிலாக அமைத்து, இயற்கை வளத்திற்காகவும், விவசாய நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், பக்தர்களின் தேவைக்காக, தினசரி விருட்சங்களுக்கு விருட்ச பூஜையுடன் நட்சத்திர நவக்கிரக சாந்தி பூஜைகள் நடைபெறுகிறது.

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது திருமணத்தடை, உத்யோகத்தடை, ஆரோக்யத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினை தடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகள் பெரிதும் பாதிக்கிறது.

பெரும்பாலான ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரம் நடைபெறும் பொழுது பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இதனால் மன உளச்சளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 01.06.2019 மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி பூஜையும் நடைபெற உள்ளது.

இதில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்ல எண்ணை, வெல்லம், வன்னி சமித்து, நாயுருவி, கறுப்பு திரட்சை போன்ற பல பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், காலபைரவருக்கும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment