Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, January 5, 2019

Hanuman Jayanti 2019 - 1000KG Red Chilli Yagam


தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவுடன்
1000 கிலோ மிளகாய் வற்றல் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இன்று 05.01.2019 சனிக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற்றது.

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் 108 கலச மூலிகை தேன் திருமஞ்சனமும், வெண்ணெய், 1008 வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் சனி கிரக தோஷ நிவர்த்திக்காக சனி சாந்தி ஹோமம் நடைபெற்று காலசக்கிர பூஜை நடைபெற்றது.

இதில் சகல மங்கலங்கள் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் துன்பம் விலகி குடும்பத்தில் இன்பம் பெருகவும், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ப்ரத்யங்கிரா தேவியை பிரார்த்தனை செய்து ஸ்வாமிகள் ஆசி பெற்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்னாடக, புதுவை பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் வடைமாலை, லட்டு, அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.













No comments:

Post a Comment