Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 12, 2018

Ekadasa Rudra Yagam......


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆனி பௌர்ணமியில்
நன்மை தரும் நான்கு ஹோமங்கள்ஏகாதச ருத்ர யாகத்துடன் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம்


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ த்ன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற ஆனி 13ஆம் தேதி, 27.06.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு உலக நலன் கருதி சிதம்பரம் தீக்ஷிதர்களை கொண்டு ஏகாதச ருத்ர யாகம் மற்றும் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் என நன்மை தரும் நான்கு ஹோமங்கள் நடைபெற உள்ளது.

ஸ்ரீ ருத்ர ஹோமம் சிறப்பு :

ஸ்ரீ ருத்ரம் ஈஸ்வரனை போற்றும் மிகமிக உயர்நிலை மந்திரமாகும். ஸ்ரீ ருத்ரம் தத்தமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது. பல சிதிலமடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், பல அருட்ப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளன.மேலும் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்தி அடையவும் ருத்திர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது என்பது நிதர்சன உண்மை.

ஸ்ரீருத்ரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்கி வருகிறது. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார். 63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார்  ஸ்ரீ  ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர். “ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா  மாமலர்ச் சேவடி வழுத்தும் “-என்று போற்றுகின்றார் பெரியபுராணத்தில் சேக்கிழார்.

ஒரு மரத்தின் வேரில் நீர்விட்டால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூத சம்ஹிதை,  விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித :-என்று கூறுகின்றது.

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்வதால் ஏற்ப்படும் பலன்கள் :

ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகின்றான்.அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான். இயற்கை வளம், நாடு நலம், மழை வளம், கொடிய நோய்களிலிருந்து விடுபடுதல், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்யோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மணைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறலாம். ஸ்ரீ ருத்ரத்திற்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று சூத சம்ஹிதை கூறுகின்றது. இத்தகைய அதி உன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.

பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.

11 முறை ருத்ரம் சொல்வது, ‘ஏகாதச ருத்ரம்எனப்படும். இதை 11 நபர்கள் ஒரு முறை சொல்வர். 121 முறை (11 நபர்கள் 11 முறை) சொல்வது, ‘லகு ருத்ரம்’. லகு ருத்ரத்தை 11 முறை கூறினால், மஹா ருத்ரம். இந்த மஹாருத்ரத்தை 11 முறை பாராயணம் செய்வது, ‘அதிருத்ரம்ஆகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இத்தகைய சிறப்பு வாய்ந்த யாகத்திலும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு நடைபெறும் அபிஷேகத்திலும், சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் ஆகிய யாகங்களிலும் இதர பூஜைகளிலும் கலந்துகொண்டு மஹாதேவனின் அருள் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775


No comments:

Post a Comment