Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, March 4, 2018

சுதர்சன யாகத்துடன் சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமம்......


தன்வந்திரி பீடத்தில் சஷ்டியில்
சகல தோஷங்கள் நீக்கும் சுதர்சன யாகத்துடன்
சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 07.03.2018 புதன் கிழமை மற்றும் ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சகல தோஷங்கள் நீக்கும் சுதர்சன யாகத்துடன் சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமம் நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தின் மகிமை:
3 வருடங்களில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளுக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணம் செய்து, 147 ஹோமங்களில் பங்கேற்று 67 திவ்ய தேச பெருமாளின் அபிமானம் பெற்று சைவ வைணவ பேதமின்றி ஏராளமான பாடல்பெற்ற ஸ்தலங்களில் பவனி வந்து 10கும் மேற்பட்ட மொழிகளில் 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி லிகித ஜப மந்திரங்களை கொண்டு,  மந்திரமே யந்திரமாக அமைத்து மந்திர மலையில் ஔஷத நாயகன் எனும் வைத்ய ராஜன், ஆயுர்வேத கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 9 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் மன நோய் உடல் நோய் நீக்கும் மருத்துவராக ஹஸ்தகிரி எனும் காஞ்சீபுரத்திற்கும் அருளாலகிரி எனும் சோளிங்கபுரத்திற்கும் நடுவே ஔஷதகிரியில் வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து தன் தாயிக்கு கொடுத்த சத்தியத்தின் பேரில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை எழுந்தருள செய்துள்ளார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

பிரார்த்தனை தான் உயர்ந்த வழி :
வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் கைகூட பிரார்த்தனை தான் உயர்ந்த வழி. அமைதியும், நிம்மதியும் இல்லாத வாழ்க்கை சூழல்களிலிருந்து மன நிறைவின் சூழலுக்கு வந்து சேருவதற்கான வழிகளில் ஓன்று தான் ஆலய தரிசனம். இத்திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடம் வருகைபுரியும் பக்தர்களின் மனதை புதுப்பிக்கின்றது. சுத்தம் செய்கிறது எனலாம். இப்பீடத்தில் உள்ள அபூர்வமான சிலைகளை கண்டு தரிசிக்கும் பொழுது மனதுக்கு இதுவரை கிடைக்காத ஆனந்தம் கிடைப்பதை நாம் கண்கூட காணலாம். இந்நாள்வரை இங்கு வந்து தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம், தரிசனம் செய்து திரும்பச் செல்லும்போது மறைகிறது. சில காரணங்களையும் வாய்ப்புகளையும் நினைத்து நாமாகவே நிம்மதியும் அடைகிறோம்.

தன்வந்திரி பகவானுடன் சக்கரத்தாழ்வார் :
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இது ஒரு அபூர்வமான புனிதத்தலம். இங்கு தன்வந்திரி பகவான், சக்கரத்தாழ்வார், ஆரோக்ய லக்ஷ்மி, கார்த்திகை குமரன் போன்ற 75கும் மேற்பட்ட சன்னதிகள், 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ளனர். பொதுவாக சக்கரத்தாழ்வார் இருக்குமிடத்தில் திருமாலும் குடியிருப்பார். சந்தான கோபால கதையில் திருமால் சக்கரத்தாழ்வார் மூலமாக அர்ஜூனனுக்கு வைகுண்ட தரிசனம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த தியான உருவம் தான் இங்கு சிலை வடிவமாக அமைக்க்ப்பட்டுள்ளது. அர்ஜுனன் அன்று அடைந்த பேரின்பப் பேறை இங்கு தரிசனம் செய்பவர்களும் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுதர்சன மந்திரம் :
“ஓம் நமோ பகவதே மஹாசுதர்சனாய ஹும் பட்”
தன்வந்திரி பீடத்தில் சுதர்சன பெருமாள் ஐஸ்வர்ய சக்கரத்தோடு அமைந்துள்ளதால் இங்கு பலவகையான வேண்டுதல்களை நிவாரண ஹோமமாக விசேஷமாக செய்யப்படுகின்றன. ஆரோக்ய முன்னேற்றம், செல்வப்பெருக்கு, அறிவு வளர்ச்சி, திருமண பிராப்தம் மக்கட்பேறு ஆகிய பூஜைகள் முக்கியமாகும். கலிகாலத்தில் பரமபக்தர்களும் மனக் கிலேசமின்றி வாழ்வது இயலாத காரியம். ஸ்ரீ தன்வந்திரி பெருமளையும், சக்கரத்தாழ்வாரை வழிபட்டும் ஹோமங்களில் கலந்துகொண்டும், நம் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று திருமாலின் கடாட்சத்தை நாம் பெறலாம்.

சுதர்சன ஹோமம், சத்ரு ஸம்ஹார ஹோமம் :
மகாபாரதத்திலும் விஷ்ணு புராணத்திலும் சக்கரத்தாழ்வார் மகிமை பற்றி கூறப் படுகின்றன. சூரியனின் கடுமையான ஒளியை குறைப்பதற்காக விஸ்வகர்மர் ஒரு இயந்திரத்தால் கடைந்த பொழுது சக்கரத்தாழ்வார் பிறந்தார் என்பது ஐதீகம். தாயத்துக்களில் சுதர்சன சக்கரத்தை வரைவது வழக்கம். இந்த தாயத்து வலிமையையும் கொடுக்கும், தடைகளையும் தீர்க்கும். தன்வந்திரி பீடத்தில் உள்ள சுதர்சன சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் அருளை தரக்கூடிய சுதர்சன ஹோமம், திருவோண ஹோமம், சத்ரு ஸம்ஹார ஹோமம் ஆகிய விசேஷ ஹோமங்கள், அபிஷேகங்கள் செய்து செல்வப்பெருக்கு, ஞான ஒளி, புத்திர பாக்கியம், திருமணம் போன்ற பல நன்மைகளை பெறலாம். மேற்கண்ட ஹோமங்கள் பூஜைகள் இந்த ஆரோக்ய பீடத்தில் செய்யும்பொழுது விசேஷமான பலன் கிடைக்கிறது.

சகல தோஷங்களுக்கும் பரிஹாரம் சுதர்சன யந்திரம்  :
சுதர்சன யந்திரம் இங்கு பூஜை செய்து அணிவது சத்ரு தோஷம் உட்பட உடலை பாதித்த சகல தோஷங்களுக்கும் பரிஹாரம் ஆகிறது வியாழன் புதன் ஆகிய கிரஹங்களின் தோஷம் உள்ளவர்கள் சுதர்சன யந்திரம் அணிந்தால் தோஷம் விலகுகிறது.சுதர்சன ஹோமம், மஹாசுதர்சன ஹோமம் ஆகியவை இப்பீடத்தில் வைத்து முறைப்படி . செய்து வைக்கப் படுகிறது. அதோடல்லாமல் அணிவதற்கும் வைத்து பூஜை செய்வதற்கும் வேண்டிய சுதர்சன யந்திரம் முறைப்படி பூஜை செய்து தருகின்றோம். சுபமான தரிசனத்தை கொடுப்பது என்றும், பக்தர்களுக்கு நலத்தை கொடுப்பது என்றும்சுதர்சனம்என்ற சொல்லுக்கு பொருள். ஸ்ரீதன்வந்திரி கோயிலில் தரிசனம் செய்து வழிபடுபவர்களுக்கு இது உண்மை என விளங்கும்.

இவருடன் கார்த்தவீர்யார்ஜுனர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், சத்யநாராயண பெருமாள், பால ரங்கநாதர், நவநீத கிருஷ்ணர், அஷ்ட நாக கருடன், பட்டபிஷேக ராமர், லக்ஷ்மி ஹயக்ரீவர், சஞ்சீவி ஆஞ்சனேயர். இவர்களின் அருளும் உங்களுக்கு கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படை ஒவ்வொருவரின் அனுபவமே. நம்பிக்கைக்கு நாங்கள் ஓர் வழி காட்டுகிறோம். சுதர்சனாழ்வார் தரிசனம்;, ஹோமம், யந்திரம் ஆகியவற்றின் நற்பயனை நீங்களும் பெற வேண்டும். ஸ்ரீ சுதர்சனமூர்த்தி எளிதில் பிரீதி அடையக் கூடியவர். சரணடைபவர்களிடம் கருணை காட்டுகின்ற அந்த கடவுளின் கிருபை இருந்தால் பெற முடியாதது ஒன்றும் இல்லை. ஹோமத்தில் வைத்த சுதர்சன யந்திரம், சுதர்சன ரக்ஷை, தன்வந்திரி யந்திரம், தன்வந்திரி டாளர், மூலிகை ரக்ஷை ஹோமத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு, சகல தோஷமும் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,


No comments:

Post a Comment