Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 7, 2018

மஹா சிவராத்திரி 2018..


வாலாஜா தன்வந்திரி பீடத்தில் 13.02.2018 செவ்வாய் கிழமை
மஹா சிவராத்திரி தினத்தில் ஸ்ரீ ருத்ர ஹோமமும் 468 சித்தர்கள் பூஜையும், 108 சங்காபிஷேகமும்,
கொடிய நோய்கள் நீங்கவும் விவசாயிகள் வலம் பெறவும், நட்சத்திர தோஷங்கள் அகலவும் நடைபெறுகிறது.


இறைவனிடம் வைக்கப்பட்ட எப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனைக்கும், வேண்டுகோளுக்கும், கோரிக்கைக்கும் நம் வழிபாட்டு முறையில் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு... அதன் பலன் நமக்குக் கிடைத்தே தீரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும்.

இந்த நம்பிக்கைத் தாரக மந்திரத்தை முன்வைத்துதான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் எண்ணற்ற ஹோமங்களும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. அதைப் போலவே இந்த நம்பிக்கையைத் தங்கள் மனதில் சுமந்துதான் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குத் தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தங்களுக்கு என்ன பிரார்த்தனையோ, அதை முன்வைத்து ஹோமம் செய்கிறார்கள்.

நம் பிரார்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட தேவதையை நாம் குளிர வைக்க வேண்டும். நமக்கு அனுக்ரஹம் செய்ய வைக்க வேண்டும். இதுதான் ஹோமம் செய்வதன் முக்கிய குறிக்கோள் என்பதை உணர வேண்டும்.
இப்போது ஒரு நபரால் உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்று தெரிகிறது. அடுத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவரது இருப்பிடத்துக்கு வெள்ளையும் சொள்ளையுமாகப் புறப்பட்டுச் செல்கிறீர்கள். அப்படிப் போகும்போது அவருக்கு என்ன பிடிக்குமோ, அதை வாங்கிச் செல்கிறீர்கள் அல்லவா? சம்பந்தப்பட்ட அன்பருக்கு ஸ்வீட் பிடிக்கும் என்றால், ஸ்வீட்டும், பழங்கள் சாப்பிடுவதில் விருப்பம் என்று தெரிந்தால் பழங்களும் வாங்கிச் செல்வது இல்லையா? அதுபோல் தேவதைகளும்!

உங்களுக்குக் கல்வி வேண்டுமா? ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீஹயக்ரீவரை வந்து துதியுங்கள். அவருக்கு ஒரு ஹோமம் செய்யுங்கள்.
உங்களது வீடு கட்டும் பிரச்னை சுமுகமாக முடிய வேண்டுமா? வாஸ்து பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யுங்கள்.

இப்படி இந்த பீடத்தில் ஒவ்வொன்றையும் செய்து அதனால் பலனடைந்த குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகின்றன. தங்களது பிரார்த்தனை நிறைவேறிய பின் அடுத்த முறை இங்கு வரும்போது பீடத்தில் உள்ள குறிப்பேட்டில் எழுதி விட்டுப் போகிறார்கள். சிலர் என்னிடம் போனில் தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். என்கிறார் இப்பீடத்தின் நிறுவனர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

365 நாள்கள் 365 விதமான ஹோமங்கள் நடைபெற்ற ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அவ்வப்போது புதுப் புது ஹோமங்கள் தொடங்கி, நடந்து வருவது வாடிக்கை. உலக நலனையும், பக்தர்கள் நலனையும், பல்வேறு ஆராய்ச்சிகளையும் முன்னிறுத்தியே இந்த ஹோமங்கள் இங்கே நடந்து வருகின்றன என்பதை பக்தர்கள் அறிவார்கள்.

அந்த வகையில் வருகிற 13.02.2018 செவ்வாய் கிழமை மஹாசிவராத்திரி மற்றும் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ர ஹோமமும் 468 சித்தர்கள் பூஜையும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும் மஹா பீடமாக பக்தர்களால் அழைத்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

மழை வேண்டியும், விவசாயிகளின் நலம் வேண்டியும், பஞ்ச பூதங்களின் ஆசி வேண்டியும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப நலன், நோயில்லா வாழ்க்கை, செல்வ வளம், கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, உத்தியோகம் இப்படிப்பட்ட அனைத்துக்கும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமமும் பூஜையும் நடைபெற உள்ளது. வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குள் வந்து விட்டால், உங்களது கவலைகளையும் பிரச்னைகளையும் மூட்டை கட்டி வீட்டில் வைத்து விட்டு மன நிம்மதியுடன் இங்கே வந்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின் கிடைக்கிற மன நிம்மதியை  மன மகிழ்ச்சியை நீங்கள் நன்றாகவே உணர்வீர்கள்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203






No comments:

Post a Comment