Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 7, 2017

Hayagreevar Jayanthi 07.08.2017

தன்வந்திரிபீடத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.


கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ  ஹயக்ரீவருக்கு இன்று 07.08.2017 ஆவணி திருவோணம்ஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரையுடன், லக்ஷ்மி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார்.
இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும்  காட்சி கொடுத்தவர்
ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹயக்ரீவருக்கு மாணவ செல்வங்கள் வருகிற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், மருத்துவர்கள், ஜோதிடர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், இதர ஆன்மிக பெருமக்களுக்கு கல்வி, கேள்வி ஞானமும், வாக்கு பலிதமும் ஏற்பட ஹயக்ரீவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹயக்ரீவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.பங்கேற்ற மாணவ மாணவிகளுக்க பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்ன படையலும் இராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை -  632513.

Ph:  04172- 230033, 9443330203






No comments:

Post a Comment