Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 5, 2017

ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை  தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீராம நவமி விழா முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சிறப்பு ஹோமமும் மூலவர்க்கு  மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். ஸ்ரீ ராமபிரான் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர்

தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 14 தெய்வங்களுடன் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு காலை 10.00 மணியளவில் ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனை நடைபெற்றது.

மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட்டது

ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும்.பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமரை வழிப்பட்டு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற மேற்கண்ட பூஜையிலும், யாகத்திலும் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு  கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.












No comments:

Post a Comment