Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, June 12, 2016

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கருட காயத்திரி ஹோமம்



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி  பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு அஷ்ட நாக கருடனுக்கு சன்னதி அமைத்து வருகை புரியும் பக்தர்களின் சர்ப தோஷம் நீங்கவும்,
விபத்துக்களை தடுக்கவும் கருட யாகங்கள் நடத்தி வருகிறார். வருகிற ஜீலை மாதம் 08.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கும் 09.07.2016 சனிக் கிழமை காலை 10.30 மணிக்குமேல் வளர்பிறை பஞ்சமியன்று ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீ கருட காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ கருடபகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த ஹோமத்தில்சீந்தல்கொடி, வெண்கடுகு, சும்நெய், தேன், நவசமித்துக்கள்,
வெண்பட்டு, பஞ்சகவியம் , போன்ற பொருட்களை சேர்க்கப்பட உள்ளது.இதனை தொடர்ந்து ஸ்ரீ கருடபகவானுக்கு  தேன் அபிஷேகம் செய்து சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சினை நடைபெற உள்ளது.
கருட ஹோமத்தினால் ஏற்படும் பலன்கள்
1. ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் அகலும்
2 .நாக தோஷம், சர்ப தோஷங்களினால் ஏற்படும் தோஷங்கள் குறையும்
3 .விஷஜீரம் விஷபூச்சிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்
4 .விபத்துக்கள் மற்றும் அகால மரணம் குறையும்.
.ஸர்ப்ப திசையினால் ஏற்படும் விபத்துக்கள்       குறையும்.
6 .மரண பயம்- புத்தி பேதலிப்பு- சர்ம வியாதிகள்-
.ஆறாத புண்கள்- கட்டிகள்ஆறவும்.
8 .புற்றுநோய் குணம் அடையும்
.துர்ஆவிகள் பாதிப்பு  குறைய.
10 .கோர்ட் கேஸ்  வழக்குகள் போன்ற பாதிப்புகள்    நிவர்த்தியாகும்.
11 .பாம்புகள் அண்டாமல் காத்துக் கொள்ளலாம்.
12 .பயந்த சுபாவம் கொண்டவர்கள் மனோதிடம்     பெறலாம்.
13.அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ         ஜந்துக்களால் ஏற்படும்  தொல்லைகள் நீங்க

ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||


கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-

ஓம் க்ஷிப ஸ்வாஹா


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513
Phone-04172-230033.230274

No comments:

Post a Comment