வாலாஜா
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முப்பெரும்
விழா- ஸ்ரீ முரளிதர சுவாமிகள்
தலைமையில் நடைபெற்றது.
வாலாஜா
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி விழா, விநாயகர் ஆலய
12 ம் ஆண்டு விழா மற்றும்
பாரத பிரதமர் நரேந்திரமேடியின் 65 வது
பிறந்த நாள் என முப்பெரும்
விழா கையிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில்
நடைபெற்றது.
வாலாஜா
அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்தரப்பினரும்
நோய் நொடியின்றி எல்லா வளமும் பெற்று
நீடூழி வாழ வேண்டி வினைதீர்க்கும்
ஸ்ரீ விநாயக பெருமானுக்கு 23 விதமான
இலைகள், மற்றும் 8 விதமான திரவியப்பொருட்களை கொண்டு
சிறப்பு ஹோமம் மற்றும் யாகத்துடன்
சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் நரேந்திர
மோடியின் 65 வது பிறந்த நாளையொட்டி
அவர் நீடூழி வாழ்ந்து தொண்டாற்ற
வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும், ஸ்ரீ வினைதீர்க்கும் விநாயகருக்கும்
சிறப்பு ஹோமம் மற்றும் யாகம்
நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
ஸ்ரீ விநாயகப்பொருமானை அருள் வேண்டி வழிபட்டனர்.









No comments:
Post a Comment