Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 13, 2020

Sri Gayathri Homam...


தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ காயத்ரி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 12.06.2020 வெள்ளிக்கிழமை சப்தமி திதி முன்னிட்டு காலை மாலை இரு வேலையும் ஸ்ரீ காயத்ரி தேவி ஹோமம் நடைபெற்றது.

காயத்ரி ஹோமத்தில் கீழ்கண்ட பிரார்த்தனை:

இந்த யாகத்தில் கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர கிடைக்க வேண்டியும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் வேண்டியும், பாவங்களை போக்கி  புண்ணியங்கள் அளிக்க வேண்டியும், நீண்ட ஆயுள்,  நிகரில்லா செல்வத்துடன் புகழ் கிடைக்கவும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும்,  திறமைகேற்ற வேலை கிடைக்கவும், மனதில் மகிழ்ச்சி ஏற்படவும்  சகல காரிய வெற்றியும்,  நிலம் வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம் மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்க்கை வேண்டியும் குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகள் நீங்கவும் சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் உலக மக்களுக்கு கிடைக்க மேற்கண்ட காயத்ரி ஹோமத்தில் பிரார்த்தனை  செய்யப்பட்டது.

இதனை தொடார்ந்து 4அடி உயரம் உள்ள பஞ்சலோக காயத்ரிதேவிக்கும் மா மேருவிற்கும் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு பொது மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203







Friday, June 12, 2020

10 Bhairavar Homam at Sri Danvantri Arogya Peedam on 13.06.2020


10 Bhairavar Homam at Sri Danvantri Arogya Peedam on 13.06.2020

Ashta Bhairava Maha Yagam, Maha Bhairavar with Swarnakarshana Bhairavar Homam  at Sri Danvantri Arogya Peedam on June 13th Saturday 2020
Ashta Bhairava ("Eight Bhairavas") are eight manifestations of the Hindu god Bhairava, a ferocious aspect of the god Shiva. They guard and control the eight directions. Each Bhairava has eight sub Bhairavas under him. All of the Bhairavas are ruled and controlled by Maha Swarna Kala Bhairava, who is considered the supreme ruler of time of the universe and the chief form of Bhairava.

Benefits of Ashta Bhairavar Homam
·           Enhance time management skills
·           Safeguard against accidents and other unforeseen events
·           Infuse positive energy, paving the path to success
·           Improve your financial status
·           Help overcome debts

Performing Swarna Akarshana Bhairava Homam on Kalashtami day brings great prospects for siddhi and plenty of favourable moments in your life. The mantras of the ritual spreads all kinds of positivity i.e. sakala sowbhagya. He can also protect from dangers and evil forces, bestow auspiciousness, peace and happiness.

For More Details Contact:
Sri Danvantri Arogya Peedam,
Anandhalai Madhura, Kilpudupet,
Walajapet-632513, Ranipet Dt.
E-Mail : danvantripeedam@gmail.com
Ph:04172-230033, 230274, 9443330203






Theipirai Ashtami Yagam...

வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பத்து பைரவர் யாகங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 13.06.2020 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு சொர்ண பைரவர் யாகத்துடன் சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது.
பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்:
வர வேண்டிய பணம் வரவும் தர வேண்டிய பணத்தைத் திருப்பி தரவும் கடன்களை தீர்க்கவும். நோயினால் உண்டாகும் உபாதைகள் தீரவும், வலிகள், வேதனைகள் நீங்கவும். சனிக்கிரகத்தின் தாக்கம் குறையவும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி தோஷங்கள் விலகவும்.உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன், பதவி உயர்வு பெறவும், விவசாயம், வியாபாரம் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடவும். அரசியலில் வெற்றிகள் பெறவும். கர்மவினைகள் தீரவும்.குடும்பத்தில் சர்வ மங்களமும் சகல செளபாக்கியங்கள் பெறவும், திருமணம் , குழந்தை பேறு கைக்கூடவும் அஷ்ட பைரவ யாகத்துடன் மகா காலபைரவர் யாகம் நடைபெற உள்ளது பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள்.
10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம்:
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பணம் தந்து பயங்கள் போக்கும் பத்து பைரவர்கள் இங்கு ஒரே கல்லில் நான்கு அடி உயரத்தில் நாய் வாகனத்துடன் ஆதார பீடத்தில் 1. அசிதாங்க பைரவர் அன்னம் வாகனத்துடனும் 2. ருரு பைரவர் ரிஷபம் வாகனத்துடனும் 3. சண்ட பைரவர் மயில் வாகனத்துடனும் 4. குரோதன பைரவர் கருடன் வாகனத்துடனும் 5. உன்மத்த பைரவர் குதிரை வாகனத்துடனும் 6. கபால பைரவர் யானை வாகனத்துடனும் 7. பீஷண பைரவர் சிம்மம் வாகனத்துடனும் 8. சம்ஹார பைரவர் நாய் வாகனத்துடனும் என அஷ்ட பைரவர்களுடன் சிரித்த முகத்துடன் அருள்ப்பாவிக்கிறார் மேலும் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் பணம் தரும் பைரவராக இங்கே வீற்றிருந்து அருள்பாவிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் வேறெங்கும் காணாத வகையில் 10 பைரவர்கள் அமர்ந்து அருள்பாவிக்கும் ஒரே ஸ்தலம் என்ற சிறப்பு தன்வந்திரி பீடத்துக்கு உண்டு என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
பைரவரின் சிறப்பு:
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாவிக்கிறார்.
பயத்தை நீக்கும் பைரவர் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் ஆவார். இவர் எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடி வருபவர்களுக்கு நன்மை செய்பவர் மேலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்பவர். தகுந்த பூஜைகள் செய்து வந்தால் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார் இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலும். சந்தோஷத்துடன் உடனே நன்மை அருள்பவர். நீலநிற மேனியரான பைரவர் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக்கரங்களுடன் மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் நிர்வாண கோலத்துடன் காட்சியளித்து நம்மை காத்து வருகிறார் நாய் வாகனத்துடன் காவல் தெய்வமாக காவல் பைரவர் நம்மை காத்து வருகிறார். இவரே அஷ்ட பைரவராகவும் 64 பைரவராகவும் வெவ்வேறு வாகனங்களுடன் அனுக்கிரகம் செய்கிறார் .
தேய்பிறை அஷ்டமி யாகத்தின் சிறப்பு :
ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண அகார்ஷ்ண பைரவர் ஹோமத்தின் சிறப்பு தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வ வளங்களை வாரி வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று நடைபெறும் பைரவர் யாகத்தில் பங்கேற்று இவரை வணங்குவது மிகவும் சிறப்பு அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருசேர கிடைக்கும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். மேலும் ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீர்ந்து நன்மை பெறலாம்.
அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கை முன்னிட்டு மேற்கண்ட யாகங்களில் பொது மக்கள் நேரில் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Wednesday, April 1, 2020

கிருமி நாசினி தெளித்தல்.


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்கிருமி நாசினி தெளித்தல்.

கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், கிருமிகள் பரவாமல் இருக்கவும், மேலும் சுற்றுபுற தூய்மையை கருதியும் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீட வளாகத்தில் 31.03.2020 மாலை 6.00 மணிக்கு இராணிப்பேட்டை தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் வி. ஹரிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறை குழுவினர்களால் கிருமி நாசினி தெளித்தல் நடைபெற்றது.





Tuesday, March 31, 2020

Special Homam for Coronavirus ...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்கொரோனா வைரஸ் நோயின் அச்சத்திலிருந்து மீண்டு வரசிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் நோய்த் தீர்க்கும் மருத்துவ மனையாக செயல்பட்டு வரும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்கள் கொரோனா வைரஸ் நோயின் அச்சத்திலிருந்து மீண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியம் பெற வேண்டியும் சகலவிதமான க்ஷேமங்களை பெற வேண்டியும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சென்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை திருவோண நக்ஷத்திரம் முதல் ஸ்ரீ தன்வந்திரி மஹாயாகத்துடன் மஹா ருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் சிறந்த முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்று 31.03.2020 செவ்வாய்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் ஆரோக்ய பீட அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க மஹா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது. இதில் உரிக்கொடி, கருடக்கிழங்கு, ஆடாதோடை, விஷ்ணுகிராந்தி, துளசி, பற்படாகம், கோரைக்கிழங்கு, வெண்கடுகு, நாயுருவி, சீந்தல்கொடி போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைப் பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பஞ்ச திரவிய திருமஞ்சனமும், ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு பால் மற்றும் தேன் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கலந்துகொண்டு உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மீண்டு, விரைவில் முழு ஆரோக்கியமும் நலமும் பெற பிரார்த்தனை செய்தார். இப்பூஜையின் பொழுது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 02.04.2020 முதல் 05.04.2020 வரை நடைபெற உள்ள வருடாந்தர பூஜைகளும், ஹோமங்களும், ஆராதனைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதாக தெரிவித்தார். இந்த யாக பூஜைகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Monday, March 23, 2020

Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Yagam - Santhana Gopala Yagam


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஆண் பெண் திருமணத்தடை நீக்கும் யாங்களுடன்தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற யாகம்.


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்களின் நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 07.04.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர கலாபார்வதி யாகம் :

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

இந்த ஹோமங்களில் பங்கேற்ககும் நபர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Thursday, March 19, 2020

EKADASHI HOMAMTHUDAN AMLA POWDER THIRUMANJANAM


வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஏகாதசி     ஹோமத்துடன் நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது


இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி இன்று 19.03.2020 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிக்காய் பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் வருகின்ற 31.03.2020 திருவாதிரை நட்சத்திரம் வரை நடைபெறும் தொடர் ஹோமத்தின் முதல் நாள் ஹோம பூஜையும்  நடைபெற்றது.

இதில் பால், தயிர், நெல்லிக்காய் பொடி, மஞ்சள், சந்தனம், மற்றும் பன்னீர் போன்ற திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.