கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, October 31, 2023
Sunday, October 8, 2023
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நடைப்பெற்றது 18.09.2023
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்
விநாயகர் சதுர்த்தி விழா கால சக்கர பூஜையுடன் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்
விநாயகர் சதுர்த்தி 27 நட்சத்தி
தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி விநாயகரின் சிறப்புகள்
தன்வந்திரி பீடத்தில் மட்டுமே உலகில் வேறெங்கும் காணாத வகையில் அமர்ந்த கோலத்தில், 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் இராஜ பரிபாலனம் செய்யும் வகையில் ஒரே கல்லில் வடக்கு நோக்கி தன்வந்திரி பெருமாளும். தெற்கு நோக்கி விநாயகர் பெருமாளும் அமர்ந்து பக்தர்களுக்கு கர்ம வினை நீங்கும் விதத்திலும். கர்மப்பிணி போக்கும் விதத்திலும் திரு காட்சி தருகிறார்.
மஹா கணபதி ஹோம பலன்கள்
விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற்ற கணபதி ஹோமங்
குறைந்து சுப பலன்கள் ஏற்படும்
சுபிட்சத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழலாம்.
ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்
புண்ணியம் உண்டாகும், வீட்டில்
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்
Sunday, September 17, 2023
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள்
வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 19.09.2023 செவ்வாய் கிழமை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராஹிக்கும், 20.09.2023 புதன் கிழமை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது.
வாராஹி ஹோமத்துடன் சத்ரு சம்மார ஹோமங்கள்:
உலகில் வேறெங்கும் காணாத வகையில் 4 அடி உயரத்தில் 10 கைகளுடன் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் காளி, சூலினி, திரிபுர பைரவி, பகலாமுகி, வாராஹி என 5 முகங்களுடன் கையில் 10 பத்து ஆயுதங்களுடன் திருக்காட்சி அருளும் பஞ்ச முக வாராஹி தேவிக்கு பஞ்சமி நாளில் விசேஷ ஹோமம்
சர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்கள், ஆண் பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், செல்வம் பெருகவும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெருகவும், விபத்துக்கள் வராமல் தடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும், வாகன யோகங்கள் அமையவும், பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும், வியாபாரம் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், விசேஷமான திரவியங்களைக் கொண்டு வாராஹி ஹோமமும் அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் வாராஹி தீபமும் ஏற்றி சிறப்பு வழிப்பாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளை பெற்றுக்காள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இதனைத் தொடர்ந்து 20.09.2023 புதன்கிழமை சஷ்டியை முன்னிட்டு சத்ரு தொல்லைகள் நீங்கவும், எதிரிகள் விலகவும், இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விலகவும், ரியல் எஸ்டேட் தொழில் அபிவிருத்தி பெறவும், அதிக லாபம் பெறவும் மேலும், பல்வேறு நன்மைகள் பெற ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு வேண்டி சத்ரு சம்மார ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சண்டி யாகத்துடன் முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது 06.09.2023
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சென்ற 06.09.2023 புதன்கிழமை முதல் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை ஸ்ரீ கிருஷ்ணர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், மங்கள சண்டி யாகம் ஆகிய முப்பெரும் யாகங்கள் விசேஷமான முறையில் பல்வேறு மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், கார இனிப்பு பலகாரங்கள், அஷ்ட திரவியங்கள் பல்வேறு அன்ன பிரசாதங்களுடன் சிறந்த வேத விற்பன்னர்களுடன் சிறப்பாக நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அஷ்டகால சொர்ண பைரவருக்கும் 9 அடி உயரமுள்ள மகிஷாசுரமர்த்தினிக்கும் பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர், கரும்பு சாறு, போன்ற 9 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற அன்னதானத்திலும் பங்கேற்று ஸ்வாமிகளிடம் ஆசிப்பெற்று சென்றனர்.
Thursday, September 7, 2023
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா,
06.09.2023 வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கோகுலாஷ்மியை முன்னிட்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கல் ஊஞ்சலில், ஒரு அடி உயர தவழ்ந்த கோலத்தில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள், மகா அபிஷேக, ஆராதனைகளுடன், ஸ்ரீ கிருஷ்ண யாகத்துடன் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கிருஷ்ணருக்கு வெண்ணெய் , சீடை, முறுக்கு, தட்டை, அப்பம், லட்டு உள்ளிட்டவற்றை வைத்து நிவேதனம் செய்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை, சிறப்பு அா்ச்சனைகள் நடைபெற உள்ளது.
விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் ஹோம பிரசாதங்களை வழங்கினார்.
.jpeg)
%20(1).jpeg)

















%20(1).jpeg)
