இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை, அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சென்ற 06.09.2023 புதன்கிழமை முதல் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை ஸ்ரீ கிருஷ்ணர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், மங்கள சண்டி யாகம் ஆகிய முப்பெரும் யாகங்கள் விசேஷமான முறையில் பல்வேறு மூலிகை திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், கார இனிப்பு பலகாரங்கள், அஷ்ட திரவியங்கள் பல்வேறு அன்ன பிரசாதங்களுடன் சிறந்த வேத விற்பன்னர்களுடன் சிறப்பாக நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அஷ்டகால சொர்ண பைரவருக்கும் 9 அடி உயரமுள்ள மகிஷாசுரமர்த்தினிக்கும் பால், தயிர், மஞ்சள், தேன், இளநீர், கரும்பு சாறு, போன்ற 9 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற அன்னதானத்திலும் பங்கேற்று ஸ்வாமிகளிடம் ஆசிப்பெற்று சென்றனர்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, September 17, 2023
சண்டி யாகத்துடன் முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது 06.09.2023
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment