Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 17, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது

 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள்

வருகிற 19.09.2023 மற்றும் 20.09.2023 நாட்களில் நடைபெறுகிறது

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் - வாராகி பஞ்சமி - சஷ்டி வைபவங்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 19.09.2023 செவ்வாய் கிழமை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராஹிக்கும், 20.09.2023 புதன் கிழமை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது.

வாராஹி ஹோமத்துடன் சத்ரு சம்மார ஹோமங்கள்:

உலகில் வேறெங்கும் காணாத வகையில் 4 அடி உயரத்தில் 10 கைகளுடன் 5 முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் காளி, சூலினி, திரிபுர பைரவி, பகலாமுகி, வாராஹி என 5 முகங்களுடன் கையில் 10 பத்து ஆயுதங்களுடன் திருக்காட்சி அருளும் பஞ்ச முக வாராஹி தேவிக்கு பஞ்சமி நாளில் விசேஷ ஹோமம்

சர்ப்ப தோஷங்கள்நாக தோஷங்கள்கால சர்ப்ப தோஷங்கள், ஆண்  பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும்தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும்தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும்செல்வம் பெருகவும்கொடிய நோய்களிலிருந்து விடுபடவும்நீண்ட ஆயுள் பெருகவும்விபத்துக்கள் வராமல் தடுக்கவும்விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும்வாகன யோகங்கள் அமையவும்பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும்வியாபாரம் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், விசேஷமான திரவியங்களைக் கொண்டு வாராஹி ஹோமமும் அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் வாராஹி தீபமும் ஏற்றி சிறப்பு வழிப்பாடு நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளை பெற்றுக்காள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இதனைத் தொடர்ந்து 20.09.2023 புதன்கிழமை சஷ்டியை முன்னிட்டு சத்ரு தொல்லைகள் நீங்கவும், எதிரிகள் விலகவும், இரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விலகவும், ரியல் எஸ்டேட் தொழில் அபிவிருத்தி பெறவும், அதிக லாபம் பெறவும் மேலும், பல்வேறு நன்மைகள் பெற ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு வேண்டி சத்ரு சம்மார ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது.

இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment