வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சன திருவிழா பூர்த்தி வைபவம் மற்றும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, June 19, 2023
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சன திருவிழா பூர்த்தி வைபவம் மற்றும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
Tuesday, June 13, 2023
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்மிகு தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜ காளி அம்மன், அருள்மிகு வீரபத்திரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 8.6.23 & 9.6.23
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்மிகு தாய் மூகாம்பிகை, ஸ்ரீராஜ காளி அம்மன், அருள்மிகு வீரபத்திரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வெகு விமரசையாக நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவர் ஸ்ரீ ஆரோக்லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் 90 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் அருள்மிகு தாய் மூகாம்பிகை தேவி, ஸ்ரீ ராஜ காளி அம்மன், ஸ்ரீ வீரபத்திரர் பிரதிஷ்டை செய்வதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 7.6.23 புதன்கிழமையன்று மாலை 5.00 மணிமுதல் துவங்கி 8.06.2023 வியாழக்கிழமையன்று, ஸ்ரீ தாய் மூகாம்பிகை தேவி மற்றும் 9.06.2023, வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் ஸ்ரீ ராஜ காளியம்மனின் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், சுற்றப்புற நகர கிராம மக்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசிகளையும் பெற்று சென்றனர். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்
Thursday, May 25, 2023
சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
சனீஸ்வரர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும்
ஜெயமங்கள சனீஸ்வரர்க்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும், அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெறும் முயற்சியினால் ஈஸ்வர பட்டம் பெற்றவரும் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவருமான சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் இங்கு பாதாளத்தில் அருள்பாலிப்பதால் பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆகவும் பிரகாரத்தில் மனைவியுடன் ஜெய மங்கள சனீஸ்வரர் என்ற பெயரிலும் அருள் புரிந்து வருகிறார்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27 அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாதாள சொர்ணசனீஸ்வரர் ஆலயம் உலகில் வேறெங்கும் இல்லை. இவ்வாலயத்தில் 19.05.2023 இன்று வெள்ளிக்கிழமை வைகாசி அமாவாசை சனிபகவான் ஜெயந்தி என்பதால் ஸ்வாமிகள் அருளானைப்படி அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி போன்ற தோஷங்கள் விலகவும், பித்ரு சாபங்கள் நீங்கவும், விபத்து பாதிப்புகள் தடுக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும், தொழில், வியாபாரம், விவசாயத்தில் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும், சகலவிதமான திருஷ்டிகள் அகலவும், சனி திசை, சனி புக்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையவும் காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் சனி சாந்தி ஹோமமும் பாதாள சொர்ணசனீஸ்வரருக்கு விஷேச அபிஷேகமும் வன்னி இலையால் அர்ச்சனையும் ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகமும் விஷேச அபிஷேக அலங்காரமும் நடைபெற்றது.பங்குபெற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் வருகை பாண்டிச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி ஆகிய கற்சிலைகள் காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்தது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஏம்பலம் ஆர். செல்வம் அவர்கள் பங்கேற்று மஹா தீபாராதனை செய்து சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தன்வந்திரி மஹா ஹோமத்திலும் 108 கலச திருமஞ்சனத்திலும் பங்கேற்று தன்வந்திரி பெருமாளையும் இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றார். இவ்வைபவத்தில் அனந்தலை பஞ்சாயத்து துணைத்தலைவர் திருமதி மீனா பெருமாள், ஊர் நாட்டாண்மை திரு. தேவராஜ் சாமியார், வாலாஜா நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் திரு W.G. முரளி, திரு. சுரேஷ், மற்றும் திரு. கமலக்கண்ணன், திரு. ஸ்ரீநிவாசன், திரு. குபேந்திரன் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் பங்கேற்று சிறப்பித்தனர். மேற்கண்ட சிலைகள் வைகாசி 25, ஜுன் 8 மற்றும் வைகாசி 26 ஜுன் 9 ஆகிய தேதிகளில் பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர் சிலைகள் கரிக்கோல பவனி வருகை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு
ஸ்ரீ தாய் மூகாம்பிகை, ஸ்ரீ வீரபத்திரர்
சிலைகள் கரிக்கோல பவனி வருகை
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றம் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நாளை 17.5.2023 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்கூடத்தில் திரு. லோகநாதன் ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்ட 5அடி உயரமுள்ள தாய் மூகாம்பிகை, 5 அடி உயரமுள்ள ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் 2 அடி உயரமுள்ள தட்சன், காளி ஆகிய கற்சிலைகள் மகாபலிபுரத்திலிருந்து கரிக்கோலமாக புறப்பட்டு காலை 10 மணியளவில் தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரியவுள்ளது. இச்சிலைகளுக்கு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மஹா தீபாராதனையும் சிறப்பு பூஜைகளும் நிகழ்த்தவுள்ளார்.
Tuesday, May 23, 2023
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குரு பெயர்ச்சி மஹா யாகம் அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது. நாள் 22.04.2023 சனிக்கிழமை
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
குரு பெயர்ச்சி மஹா யாகம்
அட்சய திரிதியை அன்று நடைபெறுகிறது.
நாள் 22.04.2023 சனிக்கிழமை
மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், ஒன்று, மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.
இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வருகிற 22.04.2023 சனிக்கிழமையன்று அட்சய திரிதியை அன்று குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். இப்பெயர்ச்சியில் அவசியம் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசிகள்.
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், ஆகிய ராசியினரும் குரு புத்தி குரு திசை, நடைபெறும் அன்பர்கள் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் மேற்கண்ட குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது.
ஒரே பீடத்தில் 468 சித்தர்கள் 18 குரு மகான்கள் கல்வி குரு சரஸ்வதி ராஜ மாதங்கி, ஆரோக்ய குரு தன்வந்திரி, வேத குரு காயத்ரி தேவி, போன்ற பல்வேறு குருவுடன் ஒருங்கே அமைந்து அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்திக்கு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 22.04.2023 சனிக் கிழமை காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை குருப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது. இம்மஹா யாகத்தில் பிரபல ஜோதிட வல்லுநரும் காளிகாம்பாள் உபாசகருமான புலியூர் நாகராஜன் அவர்கள் மற்றும் பல்வேறு ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மேற்கண்ட பூஜையில் கலந்து கொள்வதற்கு ஒரு நபருக்கு / ஒரு ராசிக்கு சங்கல்ப காணிக்கை ரூ. 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற ஹோம பிரசாதம் வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு அட்சய திரிதியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்திலுள்ள லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு ஹோமம் பூஜைகளும் 1008 பொற்காசுகள் கொண்டு அர்ச்சனையும் நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,
வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்- 632513
தொலை பேசி 9443330203
Web: www.danvantritemple.org Email: danvantripeedam@gmail.com
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Gpay: 9443330203
Friday, April 21, 2023
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் ஸ்ரீ ராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 30.3.2023
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும்
ஸ்ரீ ராம நவமி வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வசந்த நவராத்திரி நிறைவு மற்றும் ஸ்ரீ ராம நவமி மஹோத்சவம், இன்று பங்குனி 16, வியாழக்கிழமை 30.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 7 அடி உயரமுள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு சிறப்பு ஹோமங்கள் பூஜைகள், விஷேச ஆராதனைகள் நடைபெற்றது.
ஓரே கல்லில் 14 தெய்வங்களுடன் ராஜ பரிபாலனம் செய்யும் காட்சியுடன் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்
ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக் கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். இவர் பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருக்கு உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் ஒரே கல்லில் ஸ்ரீ ராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் குடையுடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சித்தரும் விதத்தில் ஸ்ரீ ராமருக்கு தனிச்சன்னதி அமைத்துள்ளார். இவருக்கு ஸ்ரீ ராம நவமியில் சிறப்பு ஹோமம், நவ கலச திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ ராம நவமியின் பலன்கள்









.jpeg)

























.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
