வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 108 கலச திருமஞ்சன திருவிழா பூர்த்தி வைபவம் மற்றும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 17.6.23 சனிக்கிழமை அமாவாசையில் சரப சூலினி பிரத்யங்கிரா யாகம், மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. மேலும் கடந்த 3.3.23 முதல் துவங்கி 17.6.23 சனிக்கிழமை வரை 108 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த 108 கலச திருமஞ்சனம் பூர்த்தி வைபவம் 18.6.23 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் துவங்கி நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், நெல்லிப்பொடி, திரவிய பொடி, கரும்புச்சாறு, மாதுளைச்சாறு, சாத்துக்குடி, ஆப்பிள், அரிசி மாவு, குங்குமப் பூ, பச்சைக்கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், இளநீர், பன்னீர் ஆகிய 21 வகையான திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம், அர்ச்சனை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18.6.23 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி 28.6.23 புதன்கிழமை வரை நடைபெறவுள்ள ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராகி அம்மனுக்கு விஷேச ஹோமம் மற்றும் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இவ்வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற நகர கிராம மக்கள் கலந்து கொண்டு குருவருளுடன் திருவருளையும் பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்
No comments:
Post a Comment