Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, January 8, 2023

Sri Agasthiyar Abishegam at Sri Danvantri Arokya Peedam

தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் 2 வது நாளாக ஸ்ரீலஷ்மி  குபேரர் யாகம் அகத்தியர் பிறந்த  நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை 

வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி,

 ஒரு லட்சம் காசுகள் கொண்டு  ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம் , பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது. 

  ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், பூஜை ஆகியவை நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.2 வது நாளாக இன்றும் ( 8ம்தேதி)  சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது.    ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகத்துடன் மஹா லிங்க அர்ச்சனையும், பூஜையும்  நடைபெற்றது

ஸ்ரீ அகஸ்தியர் பிறந்த  நாளாக  கருதப்படும்  மார்கழி  மாத ஆயில்ய நட்சத்திர தினத்தை முன்னிட்டு அகஸ்தியருக்கு 2 நாட்கள்  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் இன்று 8ம்தேதி  ஸ்ரீ அகஸ்தியருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றது. 

 முன்னதாக இன்று 8ம்தேதி ஸ்ரீதன்வந்திரி, மஹா சுதர்சன,ஸ்ரீ மகாலஷ்மி,  கந்தர்வ ராஜ  ஹோமங்களும் நடைபெற்றன.

 ஹோமங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் ஆகியவற்றில் ஏராளமான  ஓம்சக்தி  பக்தர்கள் கலந்து கொண்டு  தெய்வங்களை தரிசனம் செய்து பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆசிர்வாதமும் பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Saturday, January 7, 2023

Sri Lakshmi Kuberar Yagam at Sri Danvantri Arokya Peedam








 தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் 1 லட்சம் காசுகள் கொண்டு 12  நாட்கள் நடைபெறும் ஸ்ரீலஷ்மி  குபேரர் யாகம் இன்று தொடங்கியது.                                        வருகிற 11ம்தேதி கூடாரவல்லியை  முன்னிட்டு மாங்கல்ய பூஜை 

 வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி, நித்யஹோமங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில்  மகிழ்ச்சியுடன் மன நிம்மதி பெருக, கடன் தொல்லை  நீங்கி, உடல் பிணி,மனப்பிணி  நீங்கிட, லஷ்மி கடாட்சம் ஏற்பட்டு  தொழில், வியாபாரம், விவசாயம் வளம் பெற, திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு உண்டாகவும், செய்யும் செயல்களில் வெற்றிகள், பலவிதமான நன்மைகள் பெற்றிடவேண்டி  ஒரு லட்சம் காசுகள் கொண்டு  ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு யாகம் , பூஜை, அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது. 

இன்று ஜனவரி 7ம் தேதி முதல் வருகிற 18ம்தேதி முடிய 12 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாகம், பூஜை ஆகியவை இன்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. 

 முன்னதாக இன்று 7ம்தேதி ஸ்ரீதன்வந்திரி, மஹா சுதர்சன,ஸ்ரீ மகாலஷ்மி, மிருத்யுஞ்சய ஹோமங்களும் நடைபெற்றன.

 மேலும்  இன்று  பகவான் ரமண மகரிஷியின் ஜெயந்தியை முன்னிட்டு  பகவான் ரமண மகரிஷிக்கு  சிறப்பு   அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

கூடாரவல்லி 

திருப்பாவையில் ‘ கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ’ என்ற 27வது பாசுரத்தை ஆண்டாள் நாச்சியார்  பாடிய நாள் கூடாரவல்லி எனப்படுகிறது.  இந்த பாசுரத்தை பாடியதும் கோதை நாச்சியாரான ஆண்டாளுக்கு , பெருமாள் திருமண  பாக்கியம் அருளியதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆண்டாள் நாச்சியார் 30 பாசுரங்களையும் பாடி முடித்தார். 

ஆண்டாள்,  பெருமாளை  கணவராக பெற்ற நாள் இந்த கூடாரவல்லி என்பதால்  வருகிற  மார்கழி 27ம்தேதியான ஜனவரி 11ம்தேதி ( புதன்கிழமை) தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  மாங்கல்ய பூஜை  நடைபெறுகிறது.

மாங்கல்ய பூஜையில் , திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல மணமகனை பெறுவதற்கும், திருமணமான பெண்கள் கணவருடன் நல்ல அன்போடு, பிரிவு ஏற்படாமல்  வாழவும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்கவும்  மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.   மாங்கல்ய பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட  மாங்கல்ய சரடு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக  பீடாதிபதி.டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Friday, January 6, 2023

Arudra darshan, Pournami Special Homams at Sri Danvantri Arokya Peedam


தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் ஆருத்ரா  தரிசனம் , பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு ஹோமம் , அபிஷேகங்கள்

 வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி , இன்று ஜனவரி 6ம்தேதி  ஆருத்ரா தரிசனம் மற்றும் பௌர்ணமி முன்னிட்டு திறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. 

மாதந்தோறும் பௌர்ணமி நாளில் நடைபெறும் ,  ஆண்கள் திருமணத்தடை நீங்க  கந்தர்வ ராஜ ஹோமம்,  பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்,  குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் ஆகியவையும், ராகு கேதுவிற்கு சிறப்பு பூஜைகளுடன் அன்னாபிஷேகம்,  சிவலிங்க   வடிவில்  உள்ள 468 சித்தர்களுக்கும் , சித்தர்களின் ஞானகுருவான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 மேலும் இன்று  ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர்க்கும் சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகமும் நடைபெற்றது. 

 பௌர்ணமி மற்றும்  ஆருத்ரா தரிசன சிறப்பு ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து , பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.





----

Wednesday, January 4, 2023

Prathosam Abishegam, Pooja at Sri Danvantri Arokya Peedam

 தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில்  பிரதோஷம் முன்னிட்டு                                                ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

 வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி , இன்று ஜனவரி 4ம்தேதி  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு  அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. 

 பிரதோஷத்தை முன்னிட்டு  உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர்க்கும்,  சிவலிங்க   வடிவில்  உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம்  பூஜைகள் நடைபெற்றது.  மேலும் சித்தர்களின் குருவான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து , பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர். 





Monday, January 2, 2023

Vaikunda Ekadasi- Sorkkavasal Thirappu at Sri Danvantri Arokya Peedam








 தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில் வைகுண்ட ஏகாதசி ,சொர்கவாசல் திறப்பு  விழா


 வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி , இன்று ஜனவரி 2ம்தேதி  வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.

 வைகுண்ட ஏகாதசி  முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில இன்று காலை 5.30 மணிக்கு மங்கல வாத்தியத்துடன் கோ பூஜை உள்பட   மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர்  உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்தார்.

பின்னர் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்கிட  தன்வந்திரி பீட வளாகத்திற்குள்  உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு  அலங்கரிக்கப்பட்ட வளாகத்தில்  வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து , பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Sunday, January 1, 2023

New Year Special Pooja at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுசிறப்பு பூஜை, ஹோமங்கள், தொடர் அன்னபிரசாதம் வழங்குதல்ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு









 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ,  இன்று   ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  சிறப்பு பூஜை, ஹோமங்கள், தொடர் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய  பீடத்தில்  காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு , மங்கல வாத்தியத்துடன் கோபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும்,  சிறப்பு அலங்காரத்தில்  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றது. மேலும்   சிறப்பு ஹோமங்களுடன் ,காலை முதல்  இரவு வரை  பக்தர்களுக்கு  தொடர் அன்னப்பிரசாதமும், ஔஷதமும்  வழங்கப்பட்டது.

 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று  மூலவர் தன்வந்திரி பெருமாளையும் மற்ற 89 பரிவார தெய்வங்களையும் வழிபட்டு , பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

இது தவிர ஓம் சக்தி மாலை அணிந்து  கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்   வந்திருந்த திரளான பக்தர்களும் ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர்.

புத்தாண்டு தினத்தை ஒட்டி  தன்வந்திரி பீடத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதி மையம் அமைக்கப்பட்டிருந்தது.அதில் ஏராளமான பக்தர்கள் உடல் பரிசோதனைகள் செய்து கொண்டனர். மேலும்  தீ தடுப்பிற்காக தீயணைப்பு வாகனம், போலீஸ்பாதுகாப்பு உள்பட பாது காப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

 நாளை  2ம்தேதி   திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  வைகுண்ட ஏகாதசி  சொர்க்கவாசல் திறப்பு  வைபவம்  நடைபெறுகிறது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  சிறப்பு  ஹோம பூஜைகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.