ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாக சதுர்த்தி - கருட பஞ்சமி - வாராகி பஞ்சமி வைபவங்கள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை நாக சதுர்த்தியில் ஸ்ரீ ராகுகேதுவை வேண்டி சிறப்பு ஹோமம் மற்றம் அபிஷேகமும் 21.08.2023 திங்கள்கிழமை கருட பஞ்சமி நாளில் 21 அடி உயர விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவானுக்கு விஷேச ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் சர்ப்ப தோஷங்கள் நாக தோஷங்கள் கால சர்ப்ப தோஷங்கள் ஆண், பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், செல்வம் பெருகவும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெருகவும், விபத்துக்கள் வராமல் தடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் வாகன யோகங்கள் அமையவும், பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும் விசேஷமான திரவியங்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ஹோமங்களும் அஷ்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 22.08.2023 செவ்வாய்க்கிழமை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் 23.08.2023 வாஸ்து நாளை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் நடைபெறவுள்ளது இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment