வாராகி நவராத்திரி பூர்த்தியும் சுதர்சன ஜெயந்தியும்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஆஷாட நவராத்திரி எனும் வராகி நவராத்திரி
வைபவம் நிறைவடைந்தது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் சென்ற ஆனி அமாவாசைக்கு அடுத்த நாள் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை பிரதமை திதி முதல் துவங்கி 26.06.2023 திங்கட்கிழமை வரை தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற்று வந்த ஆஷாட நவராத்திரி எனும் வாராகி நவராத்திரி வைபவம் இன்று 27.06.2023 செவ்வாய்க்கிழமை நவமி திதியில் சிறப்பாக நிறைவுற்றது.
ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி எனும் வாராகி நவராத்திரி வைபவம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஒன்பது நாட்களும் தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பஞ்சமுகவாராகி யாக (சூலினி, காளி, பகுளாமுகி, திரிபுரபைரவி, வாராகி) ஐந்து முகங்களுடன் ஐந்தடி உயரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பஞ்ச முக வாராகி அம்மனுக்கு பல்வேறு வகையான கிழங்கு வகைகள், தாமரை மலர்கள், நவ தானியங்கள், விஷேச மூலிகைகளைக் கொண்டு நவ துர்கா ஹோமம், நவலக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், சூலினி துர்கா ஹோமம், காளி ஹோமம், சண்டி ஹோமம் போன்ற விஷேச ஹோமங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விஷேச திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பல வண்ண மலர்களால் அர்ச்சனை நடைபெற்று வாராகி தீபம் வைத்து உளுந்து வடை, மிளகு கலந்த தயிர்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வாராகி நவராத்திரியின் ஒன்பது நாளும் வழங்கப்பட்டு வந்தது.ஸ்ரீ பஞ்சமுக வாராகி ஒவ்வொரு நாளும் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாள். இதனைத் தொடர்ந்து நாளை ஆனி மாதம் தசமி திதி சித்திரை நட்சத்திரம் 28.06.2023 புதன்கிழமை ஸ்ரீ சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பிடத்தில் 4அடி உயரத்தில் 16 திருக்கரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு மஹா சுதர்சன ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment