குரு பூர்ணிமா - பௌர்ணமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது
குரு பூர்ணிமா நாளில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி பீடத்திலுள்ள அனைத்து குருமார்களையும் வேண்டி இன்று 03.07.2023 திங்கள்கிழமை பௌர்ணமி தினத்தில் ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் 468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கு விஷேச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுதர்சனருக்கு 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் லக்ஷ்ச ஜப மஹா சுதர்சன ஹோமம் மற்றும் 27 கலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் விஷேச பூஜைகளில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விஷேச அன்னதானத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஹோம பிரசாதங்கள் அளித்து ஆசிகள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment