Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 12, 2022

21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரமுள்ள

விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 4.2.2022, வெள்ளிக்கிழமை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 5.2.2022, சனிக்கிழமை மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை முன்னிட்டுவிஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷணம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

                                

                                       





No comments:

Post a Comment