மஹோத்ஸவபுரி எனும் தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஹோமம் - திருமஞ்சன திருவிழா - புஷ்பாஞ்சலி04.05.2019 முதல் 02.06.2019 வரை நடைபெறுகிறது.
வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை
அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக
ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து, ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின்
நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இன்று
மக்களால் சௌபாக்யபுரியாகவும், மஹோத்ஸவபுரியாகவும்
மஹோத்ஸவ க்ஷேத்ரமாகவும், ஔஷதகிரியாகவும் அழைத்து மகிழும் ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 04.05.2019 சனிக்கிழமை முதல் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை வரை அக்னி நக்ஷத்திரத்தின்
உஷ்ணாதிக்கம் குறைய வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு
தொடர் திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும் தினம் ஒரு திரவியம் கொண்டு திருமஞ்சன திருவிழாவாக
நடைபெற உள்ளது.
தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதமாகும். இம்மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனம், பூஜைகள்
நேரில் பார்த்தால், அளவற்ற செல்வம் தரும். மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
திருமஞ்சனம் என்றால் என்ன :
திருமஞ்சனம் என்றால் “புனித
நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது இறைவனை பல்வேறு
வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். இதன்மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும். பெருமாளையும் தாயாரையும்
வழிபட்டால் வாழ்வு சிறக்கும். அன்றைய தினம் தன்வந்திரி பீடத்தில் மக்கள் திரண்டு
வந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவானை மன நலம், உடல் நலம் வேண்டி
குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்து வழிபடுவார்கள்.
அவ்வமையம் பல்வேறு ஆச்சரியங்களை பகவான் நிகழ்த்துகிறார் என்பது வருகை புரியும் பக்தர்களின்
நம்பிக்கையாகும்.
அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை 27 நாட்கள், அக்னி
நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், குழந்தைகளுடைய கல்வி,
ஆரோக்யத்தில் முன்னேற்றம் அடையவும், விவசாய நலனுக்காகவும், அம்மை போன்ற நோய்கள்
ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்ய கடவுளை மனம்
குளிர்விக்கும் வகையில் பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், கரும்புசாறு,
பழசாறு, நெல்லி பொடி, முள்ளி பொடி, உளர் திராட்சை பழங்கள், மூலிகை பொடிகள், துளசி
தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், பஞ்சாமிருதம் போன்ற விதம் விதமான பொருட்களால் தினம்
ஒரு திரவியம் என்ற வகையில் தன்வந்திரி ஹோமத்துடன் திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும்,
சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இவ்வைபவத்தை நேரில் கண்டுகளிப்பது மூலம்
ஏராளமான பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மேலும் தினசரி திருமஞ்சனம் முடிந்ததும் தன்வந்திரி பெருமாளுக்கு கண்கவர்
வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலியுடன், சதுர்வேத பாராயணத்துடன்
16 வகை தீபங்களால்
ஷோடச ஆராதனையும் நடைபெற உள்ளது.
இத் திருமஞ்சன திருவிழாவின் மூலம் நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்யும். விவசாயம்
செழிக்கும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பங்கேற்பவர்களுக்கு
மனதில் தைரியம் அதிகரிக்கும். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி
வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில்
திருமணம் நடைபெறும் திருமஞ்சனம் தரிசனம் செய்பவர்களுக்கு குடும்பத்தில்
செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மொத்தத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் 75 பரிவார
மூர்த்திகள், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் இவர்களது பேரருளும் நமக்கு கிடைக்கும் என்கின்றனர்
தன்வந்திரி குடும்பத்தினர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment