தன்வந்திரி பீடத்தில்
மாணவ-மாணவிகளின் நலன் கருதி
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம்
நடைபெற்றது.
'நோயற்று
வாழட்டும் உலகு' என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு தன் தாய்க்கு
கொடுத்த சத்தியத்தின்படி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீமுரளிதர
ஸ்வாமிகளால் ஸ்தாபனம் செய்யப்பட்டது, வேலூர் வாலாஜாபேட்டை
அருகே உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். ஸ்ரீதன்வந்திரி பகவான்தான் இங்கே பிரதான
தெய்வம்.
இன்று 03.03.2019
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கல்வியில்
மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி
ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர்
தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற்றது.
கல்விதான் அனைத்துக்கும் பிரதானம்.
இன்றைக்குக் குடும்ப ஒற்றுமை, வேலையின்மை, தாம்பத்தியத்தில் பிரிவு, குழந்தைப்
பேறின்மை, தேவையில்லாத வழக்குகள், விவகாரங்கள்
போன்றவற்றுக்குப் போதிய கல்வியறிவு இல்லாததுதான் காரணம். மனிதனைப்
பக்குவப்படுத்துவது கல்வி. அது இல்லை என்றால், அனைத்திலும்
தோல்விதான் கிடைக்கும். எனவே, இந்த உலகில்
உள்ள அனைவரும் போதிய கல்வியறிவு பெற வேண்டும், கல்வித் திறன்
மேம்பட வேண்டும், பெற்ற கல்வியால்
வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஹோமங்கள் நடைபெற்றது.
இந்த யாகத்தில் ஏலக்காய் தவிர ஹோமத்தில் தேன், நெய், தாமரை மற்றும் பல விதமான புஷ்பங்கள் பயன்படுத்தபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment