ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் நடைபெறும்மஹோத்ஸவம் –
2019 விழாவில் தமிழக
ஆளுனர் பங்கேற்றார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை 1000க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்ற நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகமும் சஹஸ்ர கலச திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் நண்பகல் 12.00 மணியளவில்
வருகை புரிந்து பாரதமாதா
சிலைக்கு தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து மஹோத்ஸவம் 2019 முப்பெரும் விழாவையொட்டிய
நினைவு பலகையை திறந்து வைத்தார். பின்னர் மூலவர் ஸ்ரீதன்வந்திரி
பகவானுக்கு ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற நெல்லிக்காய் பொடி திருமஞ்சனத்திலும்,
சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெற்ற
மஹா ஆரதியிலும், சஹஸ்ர கலச ஹோம பூர்ணாஹுதியிலும் பங்கு கொண்டார்.
மேலும் முப்பெரும் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி அவர்கள் வரவேற்புறை
நிகழ்த்தினார். பிறகு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சார்பாக
“யக்ஞஸ்ரீ” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளும்,
திருமதி நிர்மலா முரளிதரன் அவர்களும் தமிழக ஆளுனர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு பொன்னாடை போற்றி, மாலை
அணிவித்து கௌரவித்தார்கள். பிறகு ரெப்கோ வங்கியின் முன்னாள் இயக்குனர்
ஆர். வரதராஜன் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் செயல்பாடுகள்
குறித்து விரிவாக எடுத்துறைத்தார். தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டதைப்
பற்றியும், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலை வேறு எவருக்கும்
ஏற்படக் கூடாது என்பதற்காக உலகில் உள்ள அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீதன்வந்திரி
ஆரோக்ய பீடம் தொடங்கப்பட்டது பற்றியும் உருக்கமாக விவரித்தார்.
தமிழக ஆளுனரின் வருகை ஸ்ரீதன்வந்திரி பீடத்துக்கே
மிகவும் பெருமை சேர்ப்பதாகவும் நன்றியுடன் கூறினார். தமிழக ஆளுனர் தனது சிறப்புறையில் ஆயுர்வேதத்தின்
முக்கியத்துவத்தையும், அதன் வளர்ச்சியையும் பெருமையாக கூறினார்.
பல சிறப்பு அம்சங்களைகொண்ட ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவிய திரு
முரளிதார ஸ்வாமிகளை சிறப்பாக பாராட்டினார். மேலும் வாலாஜா தன்வந்திரி
பீடத்தில் உலக மக்களின் நன்மைக்காக தினசரி தன்வந்திரி ஹோமம் மற்றும் பல சிறப்பு ஹோமங்களையும்
நடத்தி வருவது பெருமைக்குறியது. முரளிதர ஸ்வாமிகளின்
58 வது ஜெயந்தி விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர் மேதகு தமிழக ஆளுனருக்கு
ஸ்ரீ தன்வந்திரி பகவானின் திருவுருவ படமும்,
அமிருத கலசமும் அருட்பிரசாதமாக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது.
1000 தவில் நாதஸ்வரம் வித்வான்களின்
நாதசங்கமம் விழாவில் பங்கேற்ற ஐந்து கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டது.
விழாவின் முடிவில் திரு. ஆர். பிரகாஷ் அவர்கள் விழாவில் பங்கேற்றவர்களுக்கும், மற்றும்
இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார்.
பின்னர் தேசியகீதம் பாடப்பட்டது.
தொடர்ந்து ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸின்
சார்பாக “யக்ஞஸ்ரீ
கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளுக்கு 1000 தவில் நாதஸ்வர வித்வான்கள் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் வாசித்ததிற்கான சிறப்பு
விருதை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். ஏ. ராமன் ஐ.ஏ.எஸ். அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் இதில் கலவை
தவத்திரு. சச்சிதானந்த ஸ்வாமிகள், கோவை மஹாப்ரத்யங்கிரா பீடம் திரு.
வெங்கடேச சர்மா, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,
உதவி கண்காணிப்பளர், வட்டார வருவாய் அலுவலர்,
காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ்
உரிமையாளர் திரு மனோஹர் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறபபித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment