Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, March 24, 2019

Thirumanjana Thiruvizha - Danvantri Homam - Pushpanjali


மஹோத்ஸவபுரி எனும் தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஹோமம் - திருமஞ்சன திருவிழா - புஷ்பாஞ்சலி04.05.2019 முதல் 02.06.2019 வரை நடைபெறுகிறது.

வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து, ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இன்று மக்களால் சௌபாக்யபுரியாகவும், மஹோத்ஸவபுரியாகவும் மஹோத்ஸவ க்ஷேத்ரமாகவும், ஔஷதகிரியாகவும் அழைத்து மகிழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 04.05.2019 சனிக்கிழமை முதல் 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை வரை அக்னி நக்ஷத்திரத்தின் உஷ்ணாதிக்கம் குறைய வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு தொடர் திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும் தினம் ஒரு திரவியம் கொண்டு திருமஞ்சன திருவிழாவாக நடைபெற உள்ளது.
தேவர்களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதமாகும். இம்மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனம், பூஜைகள் நேரில் பார்த்தால், அளவற்ற செல்வம் தரும். மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

திருமஞ்சனம் என்றால் என்ன :

திருமஞ்சனம் என்றால் புனித நீராட்டல்என்று அர்த்த மாகும். அதாவது இறைவனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். இதன்மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும். பெருமாளையும் தாயாரையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். அன்றைய தினம் தன்வந்திரி பீடத்தில் மக்கள் திரண்டு வந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவானை மன நலம், உடல் நலம் வேண்டி குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்து  வழிபடுவார்கள். அவ்வமையம் பல்வேறு ஆச்சரியங்களை பகவான் நிகழ்த்துகிறார் என்பது வருகை புரியும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை 27 நாட்கள், அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், குழந்தைகளுடைய கல்வி, ஆரோக்யத்தில் முன்னேற்றம் அடையவும், விவசாய நலனுக்காகவும், அம்மை போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்ய கடவுளை மனம் குளிர்விக்கும் வகையில் பால், தயிர், நெய், பன்னீர், இளநீர், தேன், கரும்புசாறு, பழசாறு, நெல்லி பொடி, முள்ளி பொடி, உளர் திராட்சை பழங்கள், மூலிகை பொடிகள், துளசி தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், பஞ்சாமிருதம் போன்ற விதம் விதமான பொருட்களால் தினம் ஒரு திரவியம் என்ற வகையில் தன்வந்திரி ஹோமத்துடன் திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இவ்வைபவத்தை நேரில் கண்டுகளிப்பது மூலம் ஏராளமான பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் தினசரி திருமஞ்சனம் முடிந்ததும் தன்வந்திரி பெருமாளுக்கு கண்கவர் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலியுடன், சதுர்வேத பாராயணத்துடன் 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனையும் நடைபெற உள்ளது.

இத் திருமஞ்சன திருவிழாவின் மூலம் நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்யும். விவசாயம் செழிக்கும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும் திருமஞ்சனம் தரிசனம் செய்பவர்களுக்கு குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மொத்தத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் 75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் இவர்களது பேரருளும் நமக்கு கிடைக்கும் என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Swathi Homam


தன்வந்திரி பீடத்தில்
நடைபெற்ற ஸ்வாதி ஹோமத்தில்
பழம்பெரும் நடிகை லதா பங்கேற்பு.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலகநலன் கருதி இன்று 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்வாதி ஹோமத்தில் பழம்பெரும் நடிகை திருமதி லதா அவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளின் ஆசி பெற்றார்.

ஸ்வாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் நல்ல பலனை தரும். எதிரிகளின் தொல்லை விலகும், மரண பயம் நீங்கும், எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும், கடன் சுமை குறையும், நோய் குணமாகும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும், வேலையில் இடைஞ்சல் அகலும், நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும், என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்தனை செய்தனர்.

இந்த யாகத்தில் பலவகையான மலர்கள், வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி மேலும் பலவகையான மூலிகைகளும் சேர்க்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொர்ந்து பால், தயிர்,  இளநீர், மஞ்சள், சந்தனம், துளசி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள ஸ்ரீகூர்ம லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பசும்பால், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், பானகம் போன்ற பிரசாதங்களை  நைவேத்தியம் செய்து  செவ்வரளி மலர்களாலும், துளசி இதழ்களாலும் சிறப்பு அர்ச்சனையுடன் நெய் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Thiruvona Homam - Ekadasi Thirumanjanam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைசர்வரோக நிவாரணம் பெறதிருவோண ஹோமமும்
ஏகாதசி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து நடைபெற்ற ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வைபவ க்ஷேத்ரமாக திகழும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் மஹா தன்வந்திரி ஹோமமும் ஏகாதசி திதியை முன்னிட்டு நெல்லி, முள்ளி பொடி கொண்டு சர்வரோக நிவாரணம் பெற மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், நடைபெற உள்ளது.

இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள் என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன் வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில் பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!

இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும் ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லக்ஷகணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில் அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் மேற்கண்ட தினங்களில் ஹோமமும் நெல்லி பொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் திருவோண ஹோமம், தன்வந்திரி ஹோமம், தைலாபிதேகம், நெல்லி முள்ளி திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திருவோண ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்திலும், மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் நெல்லி, முள்ளி பொடி அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தைலப்பிரசாதம், நெல்லிப்பொடி தீர்த்த பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெற பிராத்திக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Friday, March 22, 2019

Sri Rama Navami 2019


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீராம நவமி விழாவுடன் சிறப்பு ஹோமம்நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு வருகிற 13.04.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீராம நவமி விழாவுடன் சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர்.

ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான்.

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு வருகிற 13.04.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனை நடைபெற உள்ளது. மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.

காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீராம நவமி விழாவுடன் சிறப்பு ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமரை வழிப்பட்டு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெற மேற்கண்ட பூஜையிலும், யாகத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203