Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 3, 2018

Kubera Samrajya Mahalakshmi Yagam

தன்வந்திரி பீடத்தில்

சம்பத்துக்கள் தரும் 

சாம்ராஜ்ய குபேர மஹாலக்ஷ்மி யாகம்.


அதிருத்ர மஹா யாகம், ஆயிரம் சண்டி யாகம், 365 நாட்கள் 365 விதமான யாகங்கள், வருடம் முழுவதும் சண்டி யாகம், கோடி ஜப தன்வந்திரி ஹோமம், கோடி ஜப தனலக்ஷ்மி யாகம் மற்றும் லக்ஷம் நெல்லிக்கனி யாகம், லக்ஷம் தாமரை யாகம், லக்ஷம் மோதக யாகம், லக்ஷம் லட்டு யாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் யாகம், 10 லக்ஷம் ஏலக்காய் யாகம்போன்ற பல்வேறு யாகங்கள் நடைபெற்ற வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இழந்து போன அனைத்து செல்வங்களையும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற வருகிற தீபாவளி, ஐப்பசி அமாவாசை மற்றும் ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு குபேர சாம்ராஜ்ய மஹாக்ஷ்மி ஹோமமும் லக்ஷ்மி குபேரபூஜையும் ஆயிரகணக்கான தாமரை மலர்களை கொண்டு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலயத்தில் இருந்து சோளிங்கர்திருத்தணி செல்லும் மார்கத்தில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 75 சன்னதிகளில் முக்கிய சன்னதியாக ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் சன்னதி போற்றபட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை ன்று குபேர யாகம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக குபேரன் தான் இழந்த செல்வங்கள், சக்திகளை திரும்ப  பெற்ற ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர யாகம் மிகவும் சிறப்பு பெற்றது ஆகும்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி மாபெரும் லக்ஷ்மி குபேர யாகம் நான்கு நாட்கள் ஸ்வாமிகளின் ஜெயந்தி விழாவாக நடைபெற உள்ளது.

இதில் பல்லாயிர கணக்கான தாமரை மலர்களுடன் நெய், தேன், பட்டு வஸ்திரங்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பல்வேறு விதமான பழங்கள், பலவகை புஷ்பங்கள், இருபத்தோரு விதமான அபிஷேகப் பொருட்கள் கொண்டு நடைபெறும் குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்திலும், இதர யாகங்களிலும், பூஜைகளிலும், அபிஷேகங்களிலும், சிறப்பு அர்ச்சனையிலும் பக்தர்கள் கலந்து கொண்டு குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி அருளுடன் பொருள் பெற்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர், ஆரோக்யலக்ஷ்மி தாயார், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருடன் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசித்து  ஆரோக்யத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது.

ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேர பூஜை குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.

மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

குபேரன் ஆட்சி குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். செல்வம் தரும் குபேரன் இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

செல்வம் குவியும் வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி குபேரனை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு ஆண்டு தோறும் அட்சய திதி, தீபாவளி, தை வெள்ளி போன்ற தினங்களில் லட்சுமி குபேர யாகம், மகாலட்சுமி யாகத்துடன் பிரார்த்தனை நடைபெறுகிறது. தற்பொழுது தீபாவளியை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை, நான்கு நாட்கள் லட்சுமி குபேர யாகமும், சிறப்பு அபிஷேகமும், கனக புஷ்பார்ச்சனையும் காலை, மாலை இருவேளயும் நடைபெறுகிறது.

செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, பூசம் நக்ஷத்திரம் தரிசனம் செய்து வளம் பெறலாம். மேலும் நோய் நொடிகள் தீரும் இந்த ஆலயத்தில் நோய் நொடி தீர்க்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள் அருளாசியுடன் சொர்ண கணபதி யாகம்,லக்ஷ்மி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், லக்ஷ்மிகுபேர ஹோமம், சுக்கிர கிரஹ ஷாந்தி ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், மஹாலக்ஷ்மி யாகம், பஞ்சசூக்த ஹோமம், லக்ஷ்மி வராக ஹோமம், சோடச லக்ஷ்மி யாகம் என பல யாகங்களும், ஹோமங்களும் இதனுடன் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



No comments:

Post a Comment