Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 24, 2018

Bhairavar Jayanti - Laksha Japa Kala Bhairavar Homam with Ashta Bhairavar Yagam ....


தன்வந்திரி பீடத்தில்பைரவர் ஜயந்தியை முன்னிட்டுஒரு லக்ஷம் காலபைரவர் ஜபத்துடன்அஷ்ட பைரவர் யாகம்.


வாழ்க்கை என்பது இனிமையானதுதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதில் பிரச்னைகளும் துயரங்களும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பக் கலந்துள்ளன. எப்படிப் பாலில் நீர் கலந்துள்ளது தெரியாதோ, அதுபோல் பிரச்னைகளையும் துயரங்களையும் புறம் தள்ளி விட்டு, இனிமையை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்நாட்களை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும். ஆனால், அது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பதுதான் கேள்வி. நமது கவலைகள், பிரச்னைகள், ஏக்கங்கள், சோகங்கள் இப்படி அனைத்தையும் போக்குவதற்கு எண்ணற்ற ஹோமங்கள் ஆன்மிக நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஹோமங்கள் என்பவை ஒரு பரிகாரம். ஒருவருக்கு வந்திருக்கும் தீராத தோஷத்தைத் துடைத்து எறிய, தீவினைகள் நீங்கி நல்வினைகள் நம்மை சூழ  இறைவனின் பரிபூரண ஆசி என்றென்றும் நமக்குப் பக்கபலமாக இருக்க இது போன்ற சில வரங்களை எதிர்பார்த்தே பரிகார ஹோமங்களை நடத்துவதற்குப் பலரும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு வருகை புரிந்து ஸ்வாமிகளின் ஆசி பெற்று ஹோமம் செய்து பிரார்த்திக்கிறார்கள். ஸ்ரீ தன்வந்திரியின் அருளுடன் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பலன் பெறுகிறார்கள். உண்மையான பக்தியுடன் வந்து பிரார்த்திக்கும் அனைவருக்கும் நற்பலன்கள்தான் விளைந்து வருகின்றன என்கின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

இவற்றை மனதில் கொண்டு மக்கள் நலன் பெற வருகிற 30.11.2018 வெள்ளிக்கிழமை பைரவர் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒரு லக்ஷம் கால பைரவர் மூலமந்திர ஜப ஹோமத்துடன் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் மஹா ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், கூஷ்மாண்ட தீபம் ஏற்றி செவ்வரளி புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து, உளர்ப்பழங்கள், 9 வகையான நிவேதனங்கள் கொண்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற உள்ளது.

இறைவன் நம்மைக் காத்து இரட்சிப்பவன் என்று எண்ணி நாம் அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று பிரதான கடவுளை வேண்டி வணங்குகிறோம். ஆனால் அந்த ஆலயத்தில் எல்லோரும் பரிவார தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இல்லை என்றால் மிகையாகாது.  சிலர் ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், கால பைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பல வகையான மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். அதில் காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.

தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மஹா காலபைரவர்...

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருகிறார்.

பைரவர் ஜெயந்தி விழா....

இந்தாண்டு பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30.11.2018 வெள்ளிக்கிழமை கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும்,  வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க,  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம் பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க நடைபெறும்  மஹா யாகங்களிலும், அபிஷேகங்களிலும், அர்ச்சனைகளிலும் சங்கல்பம் நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறும் பைரவர்  ஜெயந்தி விழாவில் அனைவரும் பங்கேற்று பலன் பெற அழைக்கின்றோம்.

காலபைரவர் ----பைரவரின் சிறப்புகள்...

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.

தன்வந்திரி பீடத்தின் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் / சொர்ண கால பைரவர்.....

சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் வடிவங்களுள் பைரவர் ஒரு அம்சமாகும் இந்த பைரவர், அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியைத் தனது மடியில் இருத்திக்கொண்டு மலர்ந்த தாமரை மலர் முகத்துடன் சடைமுடியில் பிறைச்சந்திரன் சூடியும், கரங்களில் தாமரை மணிகள் பொதித்த சங்கம், அபய ஹஸ்தத்தொடு பொன் சொரியும் குடம் ஒரு கரத்தில் தாங்கி, மறுக்கரத்தால் ஆதி சக்தியை ஆலிங்கனம் செய்தபடியும் காட்சி அளிக்கிறார். மறு கரத்தில் சூலமும். கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்து. தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கிறார் இவருக்கு அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இவரை பொன், பொருள், குடும்ப க்ஷேமம் வேண்டியும் சகல சம்பத்துகளும் பெறவும் வழிபட்டு வருகின்றனர். தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு, ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் இந்த பைரவரை தரிசித்து, பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment