தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஇலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் சிறப்பு வைபவங்கள்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
இன்று 06.11.2018 செவ்வாய்கிழமை தீபாவளியை முன்னிட்டு பீடத்தில்
பிரதிஷ் டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு
சிறப்பு அன்னபூரணி ஹோமம், அபிஷேகம் மற்றும் அன்னபடையலும் நடைபெற்றது. மேலும் பீடத்தில்
வருகை புரியும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் உடல்
பிணி மனப் பிணி நீங்க தீபாவளி லேகிய பிரசாதம் வழங்கலும் நடைபெற்றது. சென்ற 04.11.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாந்தெராஸ், தீபாவளி
மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற ஸ்ரீ குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி
யாகத்தின் மூன்றாவது கால யாகம் நடைபெற்றது. நாளை 07.11.2018 அமாவசையில் மஹா பூர்ணாஹுதியுடன்
ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், ராகு-கேது யாகம் மற்றும் காளி
யாகம் நடைபெற உள்ளது. தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று
05.11.2018 முதல் இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமானவர் பயன்பெற்று வருகின்றனர். இதில் பேங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரி திரு.
சிதம்பர குமார் அவர்கள், இரத்தினகிரி கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும்
பெங்களூர் கனரா வங்கி ஊழியாளர் திருமதி. கற்பகம் அவர்கள் பங்கேற்றனர். இந்த முகாம்
நாளை நிறைவு பெறுகிறது. இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment