Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, February 7, 2018

திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்..


நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

வித விதமான வரங்களை அள்ளித்தரும் விஷ்ணுவின் திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் மகிழ்ச்சி, நீண்ட ஆயுள், முக்திபெறவும் நிலம் சம்பந்தமான வழக்கு, பரம்பரை சொத்து போன்ற அனைத்து பிரச்சனைகள் நீங்க எதிர்மறை சக்திகள் மற்றும் துர்ஸ்வப்னங்கள் விலகவும், வற்றாத செல்வவளம், தானியங்கள் மற்றும் தீர்க்க ஆரோக்கியம் தந்து காக்கும் கடவுளான தன்வந்திரி பகவான் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு பெற மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது. தசாவதாரம் என்று அழைக்கப்படும் பத்து அவதாரங்களில் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கூர்மர், ஸ்ரீ வராஹர், ஸ்ரீ பரசுராமர் போன்ற அவதாரங்கள் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் திருவோண ஹோமத்தில் புருஷ ஸூக்த ஹோமத்திலும், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


No comments:

Post a Comment