தன்வந்திரி பீடத்தில் நாளை
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
182வது ஜெயந்தி விழா சிறப்பு பூஜை.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைபடி நாளை 17.02.2018 சனிக் கிழமை மாசி
மாதம் துவிதியை திதி முன்னிட்டு ஸ்ரீ ரமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தி விழாவும் சிறப்பு
பூஜைகளும் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி
பகவான், ஆரோக்ய லக்ஷ்மி, மரகதாம்பிகை, மரகதேஸ்வரர், சத்யநாராயணர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர்
போன்ற பல்வேறு தெய்வங்கள் மட்டுமின்றி காஞ்சி மஹா பெரியவர், ராகவேந்திரர், மஹாவீரர்,
வள்ளலார், ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹா அவதார பாபா, வீரபிரம்மங்காரு, குழந்தையானந்த
ஸ்வாமிகள் போன்ற பல்வேறு மஹான்களையும், 468 சித்த புருஷர்களையும், பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்து பிரதி வருடம் அவர்களுடைய
ஜெயந்தி விழாவும், ஆராதனை விழாவும் சிறப்பாக நடத்தி வருகிறார். அந்த வகையில் நாளை இந்தியாவின்
தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவரும், வீரத்துறவி விவேகானந்தரின் குருவும் காளி உபாசகரும்,
ஸ்ரீ சாரதாதேவியின் அருள் பெற்றவரும், இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்று
இல்லாமல் மனிதயினம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்த திரு ராமகிருஷ்ண
பரமஹம்சரின் 182வது ஜெயந்தியை முன்னிட்டு
தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்று மூலிகை கஞ்சி
வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment