தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா
மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு
சகல
பாக்யமும்
தரும்
பாக்ய
சூக்த
ஹோமத்துடன்
முப்பத்து
முக்கோடி
தேவர்களுக்கு நான்கு
தினங்களில்
36 விதமான யாகங்கள்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்படி மாசி மகம்
பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த
ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.
மேற்கண்ட வைபவம்
இன்று 28.02.2018 புதன்
கிழமை காலை 7.00 மணி கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா
கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, பாக்ய சூக்த ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர்
ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம்,
கருட ஹோமம், லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட
பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், சதுர்வேத உபச்சாரம்,
தீபாராதனை, ஆகிய பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை 01.03.2018 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம்,
மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, தக்ஷ்ணாமூர்த்தி ஹோமம், சுயம்வரகலா
பார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், ராகு கேது பிரீதி ஹோமம், நக்ஷத்திர
ஹோமம், சரஸ்வதி ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், லக்ஷ்மி வராஹ ஹோமம்,
அஷ்ட லக்ஷ்மி யாகம், காயத்ரீ தேவி ஹோமம், சத்யநாராயண ஹோமம், காமதேனு ஹோமம், சதுர்வேத
உபச்சாரம், கலச புறப்பாடு, 36 தேவதகளுக்கு சிற்றப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்று பிரசாதம்
வழங்கப்படுகிறது.
மேலும் மதியம் 3.00 மனியளவில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலச
திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment