தன்வந்திரி பீடத்தில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஆறு மதங்களுக்குரிய
தெய்வங்களையும், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், சித்தர்கள், தவசீலர்கள்
என பல்வேறு வகையான சித்த புருஷர்களையும் பிரதிஷ்டை செய்து உலக நலனுக்காக ஆராதனை செய்து
வருகிறார்.
இப்பீடத்தை
பக்தர்கள் பூலோக வைகுண்டம் என அழைத்து மகிழ்கின்றனர். இத்தகைய சிறப்புகள் பெற்ற தன்வந்திரி
பீடத்தில் இன்று 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) என்பதால் விடியற்காலை
5.00 மணியளவில் மார்கழி மாத பூஜைகள்
நடைபெற்று சொர்க்கவாசல் (பரமபத
வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூல
ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ
தன்வந்திரி பகவான் புறப்பட்டு
வந்து, பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிந்தா கோவிந்தா என பக்தர்களின் கோஷத்துடன்
ஊர்வலமாக வந்து சொர்கவாசல் மண்டபத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை
தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா
ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற
ஹோமங்கள் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment