தன்வந்திரி பீடத்தில்
சனிப்பெயர்ச்சி மஹா யாகமும்
காலச்சக்ர பூஜையும்.
இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 4ம் தேதி மார்கழி மாதம்
செவ்வாய் கிழமை 19.12.2017 காலை சனி பகவான்
விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியானதை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00
மணிக்கு யாகசாலை பூஜை, 08.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 09.00 மணிக்கு கலச பூஜை
போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம்,
மற்றும் சனி தோஷ நிவர்த்தி பூஜையுடன் சனிபெயர்ச்சி யாகம் நடைபெற்று 27 நக்ஷத்திரங்களுக்கு உரிய
விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று வன்னி
விருட்சத்திற்கு சிறப்பு பூஜையுடன் காலச்சக்ர பூஜையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சனியால் உண்டான
பாதிப்புகள் குறைய ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட்டது.
இதில் ரிஷபம், மிதுனம், கன்னி,
விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள் சங்கல்பம்
செய்துகொண்டனர். இந்த யாகத்தில் ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி சேர்மன் திரு
D.L. பாலாஜி அவர்கள், திரு. ஜகத் ஜீவன் ராம், கோவை கிரிஜா சம்பத் குமார், தன்வந்திரி
பீட அறங்காவலர்கள், மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக பக்தர்கள்
பங்கேற்றனர்.
இந்த
யாகத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற தன்வந்திரி பகவான் டாலர், புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் 2018 தினசரி காலண்டர் வழங்கி
ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக சென்னை பிரபல
ஜோதிடர் திரு ஆதித்ய குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment