ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில்
அமாவாசை யாகத்துடன்
ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும்
திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி டிசம்பர் மாதம் 17ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை
முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி
ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை
யாகம் நடைபெற்றது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும்
செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை,
வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும், ஆண் பெண் திருமணம் நடைபெற
வேண்டியும், குடும்பக்ஷேமம் வேண்டியும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு
திருக்கல்யாணமும் நடைபெற்றது.
மார்கழி
மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில்
அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில்
மட்டுமில்லை, பல புராணங்களிலும்
உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில்
ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.
எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம்
மக்களிடையே உண்டு.
ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
எல்லோரையும் கலங்கச் செய்யும்
சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச்
செய்தார். இதனால் சனி தோஷத்தினால்
பாதிக்கப்பட்டவர்கள் இவரை
வழிபடுவது சிறப்பு. அனுமன் அவதார நாளான இன்று
இப்பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்
நடைபெற்றது. இந்த வைபவத்தில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment