வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
சகஸ்ரசண்டி மகாயாகம்.
இராகுகேது பெயர்ச்சி,
ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம்
முன்னிட்டு 26.07.2017 முதல் 30.07.2017 வரை ஐந்து
நாட்கள் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்
வேலூர்
மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே
ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம்
என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும்
தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை கொண்டு 9 அடி மூலவர் தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா
தேவி, 18 கைகளுடன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன்
மகான்களும் 468 சித்தர்கள்
சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும்
இரம்மியமாக இயற்கை
சூழலுடன் மூலிகை
வாசத் ஸ்தலமாக அமைந்து
உள்ளது.
ஷண்மத
பீடமாக
திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன்
அன்னதானம், மருத்துவ
சேவை கோ பராமரிப்பு நடைபெற்று
வருகிறது. ஆண்டு
தோறும் பல்வேறு வகையான
பிரம்மாண்ட யாகங்கள்
நடைபெற்று
வருகிறது.
குறிப்பாக
365 நாட்கள் 365 விதமான
யாகங்கள்,
சதசண்டீ
யாகம், 365 நாட்கள்
சண்டியாகம், 6000 கிலோ மிளகாய்
வற்றல் கொண்டு மஹா ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக்
கனிகளில் கனகதாரா
யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை
கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம், லட்சத்து
முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி
யாகம், ஒரு லட்சம் மோதகங்களை
கொண்டு வாஞ்சா கல்ப கணபதி
யாகம், ஒரு லட்சம் தாமரை
பூக்களை கொண்டு மஹா லட்சுமி
யாகம், முப்பது லட்சம் தாமரை
விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி
யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை
கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை
கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை
பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா
காளி யாகம், 21 ஆயிரம்
வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி
யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன்
ஸ்ரீ மஹா சுதர்சன யாகம்,
24 மணி நேரமும் 27 யாகங்கள்,
லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன்
நவகிரக ஹோமம்,நவ துர்கா
ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை
கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம்,
மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம்,55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற
பல்வேறு விதமான மஹாயாகங்கள்
உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ
கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச
ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா
பார்வதி யாகம், சந்தான கோபால
யாகம், சத்ரு
சம்ஹார ஹோமம், சூலினி
துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி
யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி
யாகம், போன்ற கார்ய
சித்தி ஹோமங்களும்
மாதம் தோறும் கயிலை
ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி
நடைபெற்று வருகிறது.
இத்தகைய
சிறப்புகளுடன்
யக்ஞபூமியாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மனநோய், உடல்
நோய் ,தீர்க்கும் வகையில் அம்மனுக்குரிய ஆடி
மாதத்தை முன்னிட்டும்
இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும் உலக
மக்கள் அனைவரும்
ஆனந்தமாக
வாழ
வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நல்ல
மழை பெய்து விவசாயம்
செழிக்க வேண்டியும் என்ற
வகையில்
ஆயிரம் சண்டி மகா யாகம்
என
அழைக்கப்படும் சகஸ்ர
சண்டி ஹோமம் நடைபெறுகிறது.
26.07-2017 தேதி
ஆடி மாதம் 10ம் தேதி புதன்
கிழமை, ஆடி பூரம், திருவோண
நட்சத்திரம் சதுர்த்தி கூடிய சுபதினத்தில்
மாலை 4.30 மணிமுதல்
கோ
பூஜை விக்னேஸ்வர பூஜை,
சண்டி தேவி கலச பூஜையுடன்
தீப
சண்டி பாராயணத்துடன் துவங்க
உள்ளது.
27.07.2017 தேதி ஆடி
மாதம் 11ம் தேதி வியாழன் காலை 6.30 மணிமுதல் எல்லா
காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி
பெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட
ஆயுளை பெறவும் இராகு கேது பெயர்ச்சி யாகம், நவக்கிரக
ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம்,மஹா சுதர்சனம், ஸ்ரீ
தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி,
மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு சண்டி
ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை
நடைபெறுகிறது.
28.07.2017 தேதி
ஆடி மாதம் 12ம் வெள்ளிக்
கிழமை காலை 7.30 மணி
முதல் இரவு 8 மணி
வரை நினைத்த காரியங்கள் நடைபெறவும்,
26 வகையான செல்வங்கள் கிடைக்கவும்,
குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும்
கலந்து கொள்ளும் புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி
பெண்களுக்கு திரு மணம் நடைபெற
வேண்டி ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஆண்களுக்கு
கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ
மஹா லட்சுமி யாகம், காலபைரவர்
ஹோமம் அதை தொடர்ந்து
சதுர் சஷ்டி பைரவ பலி பூஜை நடைபெறுகிறது.
29.07.2017 தேதி ஆடி மாதம்
13ம்
தேதி சனிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி
வரை ஹோரம்ப
கணபதி
ஹோமம், அதை
தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா
ஹோமம் தொடங்குகிறது.
இரவு 7 மணிக்கு அம்பாளின் சிறப்பு
நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30.07.2017-ந்தேதி ஆடி மாதம் 14 ந்
தேதி ஞாயிற்று கிழமைகாலை 7 மணி முதல்
இரவு
8 மணி வரை சகல சௌபாக்கியங்கள் வேண்டி
வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், தசமஹா
வித்யா ஹோமம் . ஸ்ரீசாக்த உபாசகர்களைக்
கொண்டுநடைபெறுகிறது.
தன்வந்திரி
பீடம் ஸ்தாபகர்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி பக்தர்கள்,
தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த
யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம்
நடைபெறும் 5 நாட்களிலும் பக்தர்களுக்கு
சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.
இதுபற்றி ஸ்தாபகர்
டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் கூறுகையில்,
ஆயிரம் சண்டி யாகம் என
அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம்
மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன்
பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும்
அதன்பின் மைசூர் அரசன் காலத்தில்
காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய
நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அதை
தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன்
சகலஐஸ்வரியம்
பெற்று
இறையருளுடன்
ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் 5 நாட்கள் ஸ்ரீ
சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது
என்றார்.
No comments:
Post a Comment