கோமாதா வழிபாடும் அதில் உள்ள
தெய்வங்கள்-தேவர்கள்
கோ
என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன் , அக்கினி , அரசன் , உலகம்
என்று பொருள்சொல்லப்படுகிறது . முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜைஎன்பர்.
பசுவை வணங்கினால் ஏற்படும் புண்ணியங்கள்
இந்து
சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின்உடலில்ஒவ்வொரு பகுதியிலும்தெய்வங்களும்,புனிதத்திற்குரியவர்களும்இருப்பதாகக்கருதுகின்றனர்.
பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன், திருமால்*கொம்புகளின் நுனியில் – கோதாவரி
முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம்
– சிவபெருமான்
*நெற்றி
நடுவில் – சிவசக்தி
*மூக்கு
நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள்
– வித்தியாதரர்
*இரு
காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு
கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள்
– வாயு தேவர்
*ஒளியுள்ள
நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய
நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம்
– இமயனும் இயக்கர்களும்
*உதட்டில்
– உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில்
– இந்திரன்
*முரிப்பில்
– பன்னிரு ஆரியர்கள்
*மார்பில்
– சாத்திய தேவர்கள்
*நான்கு
கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில்
– மருத்துவர்
*குளம்பு
நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின்
நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம்
மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில்
– உருத்திரர்
*சந்திகள்
தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப்
பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில்
– ஏழு மாதர்கள்
*குதத்தில்
– இலக்குமி தேவி
*வாயில்
– சர்ப்பரசர்கள்
*வாலின்
முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில்
– ஆகாய கங்கை
*சாணத்தில்
– யமுனை நதி
*ரோமங்களில்
– மகாமுனிவர்கள்
*வயிற்றில்
– பூமாதேவி
*மடிக்காம்பில்
– சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில்
– காருக பத்தியம்
*இதயத்தில்
– ஆசுவனீயம்
*முகத்தில்
– தட்சிணாக்கினி
*எலும்பிலும்,
சுக்கிலத்திலும் – யாகத் தொழில்
முழுவதும்
*எல்லா
அங்கங்கள் தோறும் – கலங்கா நிறையுடைய
கற்புடைய
மாதர்கள் வாழ்கிறார்கள் .
தேவர்களும்
அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.
அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை,
சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து
வருகின்றன. இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), மூத்திரம்(கோமியம்), பால், தயிர்,
வெண்ணெய் ஆகிய
ஐந்தும்
புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய
அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா
தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்)
வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.
காலையில்
எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம் . தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால்
இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம்
உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன்
நாராயணனின்
வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது கோலோகம். கோமாதாவின் உடற்
பகுதியும் அங்கே அருளும்
தெய்வங்களும்
1.
முகம் மத்தியில் சிவன்
2.
வலக் கண் சூரியன்
3.
இடக் கண் சந்திரன்
4.
மூக்கு வலப்புறம் முருகன்
5.
மூக்கு இடப்புறம் கணேசர்
6.
காதுகள் அஸ்வினி குமாரர்
7.
கழுத்து மேல்புறம் ராகு
8.
கழுத்து கீழ்புறம் கேது
9.
கொண்டைப்பகுதி ப்ரும்மா
10.
முன்கால்கள் மேல்புறம் சரஸ்வதி, விஷ்ணு
11.
முன்வலக்கால் பைரவர்
12.
முன் இடக்கால் ஹனுமார்
13.
பின்னங்கால்கள் ப்ராசரர், விஷ்வாமித்திரர்
14.
பின்னகால் மேல்பகுதி நாரதர், வசிஷ்டர்
15.
பிட்டம் - கீழ்ப்புறம் கங்கை
16.
பிட்டம் - மேல்புறம் லக்ஷ்மி
17.
முதுகுப்புறம் பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி
18.
வயிற்றுப்பகுதி ஜனககுமாரர்கள் பூமாதேவி
19.
வால் மேல் பகுதி நாகராஜர்
20.
வால் கீழ்ப்பகுதி ஸ்ரீமானார்
21.
வலக்கொம்பு வீமன்
22.
இடக்கொம்பு இந்திரன்
23.
முன்வலக்குளம்பு விந்தியமலை
24.
முன்இடக்குளம்பு இமயமலை
25.
பின் வலக்குளம்பு மந்திரமலை
26.
பின் இடக்குளம்பு த்ரோணமலை
27.
பால்மடி அமுதக்கடல்
பசு
வழிபாடு வகை
வழிபாடு
இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்
அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி,
மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. ஈசனை விக்ரஹங்கள்
வைத்து விரிவாக வழிபட முடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்து வழிபடுவது போல, வீட்டில்,
கோமாதாவின் படத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்.
2. பசுவைத் திருநாமங்கள்
கூறி வழிபடா விட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கே உதவுவதாக அவற்றின்
நலனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் பசுவழிபாடே. இரண்டாம் வகை பராமரிப்பு வழிபாடு இருந்தால்
தான் முதல் வகை பூஜை வழிபாடு நடக்க முடியும். கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி
தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம்
செய்வது மிகவும் நன்மை தரும். பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில்
சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமி
அம்சமாகும். எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு
பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான
மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொரு தெய்வம் உண்டு. சதாசிவத்திற்கும்
மேலதிகாரியாக திருமூர்த்தி இருக்கிறார். இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாக மனோன்மணி
என்ற ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள். இவளே இந்த பிரபஞ்சம், உலகம், உயிர்கள் என அனைத்தையும்
படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள். இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்
வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே, முப்பத்துமுக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம்
ரிஷிகளும்,அஷ்ட வசுக்களும்,நவக் கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன. கோமாதா
பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்த
ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடு
இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன்
வாழ்ந்து வருகிறார்கள்) கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும் ; குழந்தைபாக்கியம்
உண்டாகும். கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியில்
செய்த பாவங்கள் நீங்கிவிடும் நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும். கோமாதா பூஜையைச்
செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும். முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்.அதன்
மீது பன்னீர் தெளித்து மஞ்சள்,குங்குமம் பொட்டு
அதன் நெற்றியில் வைக்க வேண்டு பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.பிறகு பசுவிற்கு
புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை
ஆகாரமாகத் தர வேண்டும். நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.எடுத்துவிட்டு,விழுந்து
வணங்க வேண்டும்.
108 போற்றியை பக்தியுடன் ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச்
சொல்ல வேண்டும் (இடையில் நிறுத்தக்கூடாது) மற்றவர்கள் “போற்றி”, “ஓம்” என சொல்லிட வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை
நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும்
பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை
வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும். பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில்
கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும் ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் பிஞ்சு
குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக
அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின்
வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை கிருஷ்ணன் தூங்கிகொண்டு இருந்தான். கண்ணனின் மேல்
பாசம் கொண்டவள் போல நடித்து, குழந்தைக்கு தாய்பால் கொடுத்தாள். அவளின் நோக்கம் பாசம்
அல்ல. அது கொடுமையான திட்டம். அது என்னவென்றால், அரக்கியின் தாய்பாலை குழந்தை குடித்தால்,
அவள் உள்ளத்தில் இருக்கும் விஷம், அவள் உடல் முழுவதும் இருந்த காரணத்தால், தாய்பாலின்
மூலமாக அவ்விஷங்கள் குழந்தையான கண்ணனின் ரத்தத்தில் பரவி, கண்ணனி்ன் இரத்தத்தை அட்டைபூச்சியை
போல உறிஞ்சி எடுத்துவிடும் என்று நினைத்தாள் அந்த அரக்கி. நாம் ஒன்று நினைத்தால் தெய்வம்
ஒன்று நினைக்கும் என்பார்கள். ஆனால் அந்த அரக்கியோ ஒரு தெய்வத்தையே மடியில் வைத்துக்கொண்டு
கொடுமை செய்ய நினைத்தாள். தெய்வ குழந்தையான கண்ணனும் அவள் உயிரை எடுக்க வேண்டும் என்றுதான்
நினைத்தான். அவளாக வந்து மாட்டினாள். பாலுடன் அரக்கியின் உயிரையும் உறிஞ்சினான் கண்ணன்.
செத்து தொலைந்தாள். அவள் உயிர் பிரிந்த போது பெரும் அலறலுடன் பூமியில் விழுந்தாள்.
மிக பயங்கரமான அந்த குரலை கேட்ட ஊர் மக்களும், தாய் யசோதையும் ஒடிவந்து பார்த்தபோது,
அரக்கி ஒருத்தி மாமிச மலை போல் இறந்து கிடப்பதை பார்த்தார்கள். என்ன நடந்தது என்பதையும்
புரிந்துக் கொண்டார்கள். ஒரு கொடூரமான அரக்கியை தன் குழந்தை கண்ணன் வீழ்த்தினான் என்ற
மகிழ்ச்சி இருந்தாலும், ஒரு உயிரை கொன்ற பாவம் பிரம்மஹத்தி தோஷமாக கண்ணனை பிடித்துக்கொள்ளக்
கூடாதே என்று அஞ்சினாள் தாய் யசோதை. உடனே அதற்கான தோஷ நிவர்த்திக்காக பசுவின் வாலில்
கண்ணனை சுற்றி, அவன் தலையில் கோமியத்தை தெளித்து தோஷத்தை போக்கினாள் யசோதை. இது, ஸ்ரீவி்ஷ்ணு
புராணத்தில் இருக்கிற தகவல்.
ஆகவே, இறைவனாக இருந்தாலும் இறைவனுக்கே தோஷம்
பிடிக்காமல் இருக்க சிறந்த பரிகாரம் பசுதான் என்கிறது சாஸ்திரங்களும் – புராணங்களும்.
பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள்: பூமாதேவியே கோமாதாவாக
அவதாரம் எடுத்தாள் என்கிறது புராணம். தேவர்களும் – அசுரர்களும் பாற்கடலைக்கடைந்தபோது
அதிலிருந்து தோன்றியது பசு. கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும்,
முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால்
முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து
முக்கோடி தேவர்கள்களும்பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள். கடைசியாக வந்த கங்கையும்
– லஷ்மியும், தங்களுக்கு இடம் இல்லாததால் வருந்தினார்கள். இதை கண்ட கோமாதா, “அகில
உலகத்தையே பூமாதேவியாக இருந்து சுமக்கும் நான், உங்களை சுமக்க மாட்டேனா?” என்று கூறி
தன் பின் பகுதியில் இடம் தந்தாள். இதனால் பின்பாகத்தில் கங்கையும், ஸ்ரீலஷ்மி தேவியும்
அமர்ந்ததால், பசுவின் சாணத்தில் ஸ்ரீலஷ்மியும், கோமியத்தில் கங்கையும் இருப்பதாக ஜதீகம்.
தோஷத்தை போக்கும் கோமாதா கோயிலுக்கு நல்லவர்கள் – கெட்டவர்கள் என்று பல பேர் வருவதால்
அவர்களுடைய தோஷம் அந்த கோயிலுக்குள் நிலைத்துவிடாமல் இருக்க அந்த காலத்திலிருந்து இந்த
காலம்வரையிலும் சில கோயில்களில், காலையில் பசுவுக்கு கோபூஜை செய்வதுடன், அந்த கோயிலை
சுற்றி அந்த பசுவை வலம் வர வைப்பார்கள்.
கங்கை எப்படி புனிதம் வாய்ந்ததோ அதுபோல்,
எண்ணற்ற மடங்கு புனிதம் வாய்ந்தது பசுவின் சாணம். பசு சாணத்தை கரைத்து வீட்டின் வாசலில்
தெளித்தால் கிருமி நாசினியாகும். பசுவின் சாணத்தால் தயாரிக்கப்படும் திருநீறின் மகிமை
அற்புதமானது. திருநீறை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கண் திருஷ்டி பாதிப்பு, விரோதிகளால்
எற்படும் தொல்லை, நோய்கள் போன்றவை நீங்கும். துஷ்டசக்திகளும் அண்டாது. கோமியத்தை வீட்டிற்குள்
தேளித்தால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் விலகியோடும். கங்கையின் அருளாசி கிடைக்கும்.
ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்வாள். கோ பூஜை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை
அழைத்து வந்து, அதற்கு மஞ்சள் – குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது
வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை
கொடுத்து நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில்
எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒரு
முறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ – குல தெய்வ அருளாசியும் கிடைத்து,
தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும்.
யாகம் - ஹோமம்
வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை
செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும்
ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை
தரும். யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி
வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி
கடாக்ஷம் கிடைக்கும். இப்படி எண்ணற்ற சக்தி வாய்ந்த பசுவை வணங்கி, முப்பத்து முக்கோடி
தேவர்களின்ஆசியை பரிபூரணமாக பெற்று, தலைமுறை தலைமுறைக்கும் வளமோடும் – நலமோடும் வாழ்வாங்கு
வாழ்வோம். ‘ கோமாதா நம் குலத்தை காக்கும் குலமாதா ’. ஆகவே கோமாதாவான பசுக்களை நன்றாக
பராமரித்து – பாதுகாத்து வணங்கினால் நிச்சயம் அனைவருக்கும் சுபிக்ஷத்தை அள்ளி அள்ளிதருவாள்
No comments:
Post a Comment