சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
வருகிற 21.06.2017 புதன் கிழமை காலை 10.00
மணியளவில் ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி திதி
கூர்மஜெயந்தியை முன்னிட்டும். மகா
விஷ்ணுவை வழிபட உகந்த தினத்தன்று
மாபெரும் ஸ்ரீ கூர்ம ஹோமமும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு
அபிஷேகமும் நடைபெற உள்ளது.
கூர்ம அவதார ஜெயந்தி பலன்.
ஆனி
மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி
திதியில் பகவான் மந்தர மலையை
பின்னே வைத்து ஆமை உருவத்தில்
பிறந்தார்.சனி தோஷத்தை போக்கும்
கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின்
இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம்..
ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது
நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக்
காட்டுகிறது.
அவதாரத்திருநாள்
மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க
எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம்
யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை
தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற
அவதாரமாகும்.
ஓம் தராதராய வித்மஹே ஓம்
லோகாத்யக்ஷõய வித்மஹே
தாராத்யக்ஷõய தீமஹி பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத் தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்
ஆந்திரா-
ஶ்ரீ கூர்மம் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ கூர்மநாதப் பெருமாள்
கூர்மவதார
பெருமாளுக்கு ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் தவிர
உலகில் வேறெங்கும் கோவில் இல்லை என்ற நிலை மாறி உள்ளது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூர்ம பெருமாளுடன்
ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி அமைத்துள்ளார்..
கூர்ம
அவதாரத்தின் ஒரு வகையானத் தத்துவம்
நற்குணங்கள்
ஒரு புரமும் துற்குணங்கள் ஒருபுரமும்
இழுக்க, ஓரு பக்தன் சாதனை
(பக்தி, யோகம், தவம்) செய்ய
விருப்பம் கொண்டால் அதை இறைவனே பொருப்பேற்று,
தொடங்கி, தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும்போது
தானே ஏற்றி நடத்தி, விஷம்
போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து,
நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான்.என்பதாகும். கூர்ம
அவதாரத்துடன்-தன்வந்திரி-மோகினி அவதாரங்கள் ஒருசேர
நிகழ்ந்து-ராகு-கேது கோள்கள்
உருவான நிகழ்வு-திருப்பார்கடல் கடைந்தது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment