Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, February 26, 2017

தன்வந்திரி பீடத்தில் அருள்தரும் அற்புத ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 26.02.2017 ஞாயிற்றுகிழமை  உலக மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான அருள் தரும் அற்புத ஹோமங்கள் நடைபெற்றது..
இன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வருகிற பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வு பயம் நீங்கவும், மேற் கல்வியில் சேர ஏற்படும் தடைகள் நீங்கவும், வாக்தேவியின் அருள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஆகிய 5 அறிவு சார்ந்த ஹோமங்கள் நடைபெற்றது. மேலும்.உலக  மக்களின் உடற்பிணி உள்ளத்து பிணி நீங்க ஆரோக்யம் பெற 108 விதமான மூலிகைகளை கொண்டு நோய்தீர்க்கும் மாபெரும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும்.பெண்களுடைய திருமணத்தடைக்கு காரணமாக விளங்குகின்ற செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம்,போன்ற பல்வேறு வகையான தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற  சுயம்வர கலாபார்வதி ஹோமமும் மாசி அமாவாசையை முன்னிட்டு உலக மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் தோஷங்கள் திருஷ்டிகள், சாபங்கள் நீக்க வேண்டியும் தைரியங்களையும் , ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா, ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம் நடைபெற்றது..

இந்த ஹோமத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், பட்டு வஸ்த்திரங்கள், சித்ரா அன்னம், திருஷ்டி நீக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டது...இதில்மாணவ மாணவிகள் திருமணத்தடை நீங்கும் பெண்கள், பொது மக்கள் வியாபாரிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. மேலும் மாணவ மாணவியருக்கு ஹோமத்தில் வைத்த எழுதுபொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பள்ளி ,ஆற்காடு லட்சுமி லோகநாதன் பள்ளி,மகாலட்சுமி நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற பள்ளி மாணவ மாணவியர்கள், கலந்து கொண்டனடர்.இறுதியில் 1000 பேருக்கு லட்டு,வடை பாயாசம், அப்பளம், என பலவகையான உணவுகள் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..


இதில் சென்னை  IAS  அதிகாரி திரு.சுடலைக்கண்ணன் சென்னை, திரு. வீரசண்முகமணி   IAS சென்னை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர். வேலூர் மாவட்ட நீதிபதி திரு.தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் தொழில்அதிபர் திரு.இராமச்சந்திரன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்... இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















No comments:

Post a Comment