வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 26/02/2017 ஞாயிற்றுக்கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.30
மணிளவில், பீடாதிபதி ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி அமாவாசை
ஹோமம் நடைபெறுகிறது..
ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி
சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி
முறையில் ஒரே ராசியில்சேர்வதே ‘அமாவாசை’
ஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த
தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது
இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை
வழிபாடு, தர்ப்பணம்,
அன்னதானம் போன்றவற்றை
ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும்
உள்ளது.
அமாவாசை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம் மஹா
ப்ரத்தியங்கிரா ஹோமம் மற்றும் சகல தேவதா ஹோமம் நடைபெற உள்ளது..இந்த ஹோமத்தில் மிளகாய் வற்றல் பூசணிக்காய்
கடுகு, மிளகு, உப்பு, சிவப்பு நிற புஷ்ப;ங்கள்,, சிவப்பு
நிற பழங்கள் சிவப்பு வஸ்த்திரங்கள், மற்றும்
வேப்பெண்ணை, யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து மஹா பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.. இதனை தொடர்ந்து 468 சித்தர்கள்,
மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் கால பைரவர், ராகு
கேது, மற்றும் மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கும்
அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது..
No comments:
Post a Comment