Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, February 28, 2017

தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியில் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர கணபதி ஹோமம் 16.03.2017 வியாழக் கிழமை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை
சங்கடஹர கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து ஹோம பூஜைகளில் கலந்து கொள்பவர்கள் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம்..
"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும. செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
யாகத்தின் சிறப்பு
யாகத்தில்கரும்பு,அருகம்புல்,நெல்பொரி,அவல்,வறுகடலை,கொப்பரை,வெல்லம்,எள்,நெய்,வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட உள்ளது.

ஹோமத்தின் பலன்கள் ஹோமத்திலும் அபிஷேகத்திலும் சிறப்பி பூஜையில் பங்பேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள்  இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்கிறார். கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ மு.ரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மார்ச் 03/03/2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சத்ரு சம்ஹார ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சஷ்டியை முன்னிட்டு வருகிற  03.03.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாபெரும் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது.
தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனை ப்ரதிஷ்டை செய்து அவ்வப்பொழுது சுப்ரமணிய ஹோமமும், சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது.
கார்த்திகை பெண்கள்
உலக மக்கள் சத்ரு பயமின்றி நீங்கவும்  செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் எதிரிகள் தொல்லை நீங்கவும், இரத்த புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கவும், தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கவும், பூமியினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், உடலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் நீங்கவும், திருமணத் தடைகள், உத்யோக தடைகள், குழந்தையின்மை போன்றவைகள் நீங்கவும், பெற்றோர்கள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல ஆரோக்யம் கிடைக்க தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட யாகம் விசேஷமாக நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், , கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்

Sunday, February 26, 2017

தன்வந்திரி பீடத்தில் அருள்தரும் அற்புத ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 26.02.2017 ஞாயிற்றுகிழமை  உலக மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான அருள் தரும் அற்புத ஹோமங்கள் நடைபெற்றது..
இன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வருகிற பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வு பயம் நீங்கவும், மேற் கல்வியில் சேர ஏற்படும் தடைகள் நீங்கவும், வாக்தேவியின் அருள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஆகிய 5 அறிவு சார்ந்த ஹோமங்கள் நடைபெற்றது. மேலும்.உலக  மக்களின் உடற்பிணி உள்ளத்து பிணி நீங்க ஆரோக்யம் பெற 108 விதமான மூலிகைகளை கொண்டு நோய்தீர்க்கும் மாபெரும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும்.பெண்களுடைய திருமணத்தடைக்கு காரணமாக விளங்குகின்ற செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம்,போன்ற பல்வேறு வகையான தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற  சுயம்வர கலாபார்வதி ஹோமமும் மாசி அமாவாசையை முன்னிட்டு உலக மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் தோஷங்கள் திருஷ்டிகள், சாபங்கள் நீக்க வேண்டியும் தைரியங்களையும் , ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய ஸ்ரீ மஹா ப்ரத்தியங்கிரா, ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம் நடைபெற்றது..

இந்த ஹோமத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், பட்டு வஸ்த்திரங்கள், சித்ரா அன்னம், திருஷ்டி நீக்கும் பொருட்கள் சேர்க்கப்பட்டது...இதில்மாணவ மாணவிகள் திருமணத்தடை நீங்கும் பெண்கள், பொது மக்கள் வியாபாரிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. மேலும் மாணவ மாணவியருக்கு ஹோமத்தில் வைத்த எழுதுபொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கேம்பிரிட்ஜ் பள்ளி ,ஆற்காடு லட்சுமி லோகநாதன் பள்ளி,மகாலட்சுமி நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற பள்ளி மாணவ மாணவியர்கள், கலந்து கொண்டனடர்.இறுதியில் 1000 பேருக்கு லட்டு,வடை பாயாசம், அப்பளம், என பலவகையான உணவுகள் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது..


இதில் சென்னை  IAS  அதிகாரி திரு.சுடலைக்கண்ணன் சென்னை, திரு. வீரசண்முகமணி   IAS சென்னை இந்து சமய அறநிலைத்துறை ஆணையர். வேலூர் மாவட்ட நீதிபதி திரு.தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் தொழில்அதிபர் திரு.இராமச்சந்திரன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்... இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















" 5 Homams at Sri Danvantri Peedam, Walajapet on 26.02.2017 " Thanks to 'MAANILAMURASU' 25.02.2017


Saturday, February 25, 2017

" Maha Sivarathri celebrations at Sri Danvantri Peedam, Walajapet " Thanks to ' DINAMANI ' 25.02.2017


Maha Sivarathri celebrations at Sri Danvantri Peedam, Walajapet .Thanks to 'SAKSHI' 25.02.2017


தன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்…

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் எனும் வகையில் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் காலை 10.00 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்சபூதங்களால் ஏற்படும் அஷ்ட்டதிக் பாலகர் பூஜையும் நடைபெறுகிறது. ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர். என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

வாஸ்து பகவான் அமைப்பு

   வருகிற 06.03.2017 திங்கட்கிழமை மாசி மாத வாஸ்து  நாள் என்பதால் காலை 10…00 மணியளவில் வாஸ்து ஹோம்ம் நடைபெறுகிறது.வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்

கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும்.·

இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் வழிவகை செய்யும் என்பதை மனதில் கொண்டு மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 04.03.2017 அன்று சகல தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 04.03.2017 சனிக்கழமை காலை 10.30 மணியளவில் சகல தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம் நடைபெறுகிறது.
வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகடள பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரத்தினால் ஏற்படும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி ஹோமமும  நடைபெற்று வருகிறது.இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறுகிறது. இதில்  கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நேல்பொரி, .எண்ணை, வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், பைரவருக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்டிதனர் தெரிவித்தனர்.


Friday, February 24, 2017

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மஹா சிவராத்ரியை முன்னிட்டு சிவபஞ்சாட்சர ஹோமமும் 468 சித்தர்களுக்கும் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சிறப்பு அபிஷேகமும் ஹோமமும் நடைபெற்றது..இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களஅவர்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து ஆனந்தம் அடைந்தனர்.இதனை தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











தன்வந்திரி பீடத்தில் அருள்தரும் அற்புத ஹோமங்கள் 26.02.2017 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 26.02.2017 ஞாயிற்றுகிழமை  உலக மக்களின் நலன் கருதியும் பல்வேறு வகையான அருள் தரும் அற்புத ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெறுகிறது.

1.  அறிவு சார்ந்த 5 ஹோமங்கள்

ள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வருகிற பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வு பயம் நீங்கவும், மேற் கல்வியில் சேர ஏற்படும் தடைகள் நீங்கவும், வாக்தேவியின் அருள் பெறவும்,, பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நிர்வாகிகளுக்கு நல்ல ஒரு இணக்கம்  ஏற்படவும் ஆரோக்ய குறைவு ஏற்படாமல் இருக்கவும் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஆகிய 5 அறிவு சார்ந்த ஹோமங்கள் நடைபெறுகிறது.

2.  ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம்

லக  மக்களின் உடற்பிணி உள்ளத்து பிணி நீங்க ஆரோக்யம் பெற 108 விதமான மூலிகைகளை கொண்டு நோய் தீர்க்கும்  மாபெரும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.



3.  சுயம்வர கலா பார்வதி ஹோமம்

பெண்களுடைய திருமணத்தடைக்கு காரணமாக விளங்குகின்ற செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம்,போன்ற பல்வேறு வகையான தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற  பார்வதி பரமேஸ்வரர் ஆன உமா மகேஸ்வரரை வழிபடும் விதத்தில் சுயம்வர கலாபார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.

4.  ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம்

மாசி அமாவாசையை முன்னிட்டு உலக மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் தோஷங்களையும் திருஷ்டிகளையும், சாபங்களையும் நீக்க வேண்டி பித்ருக்களுக்குரிய நாளான அமாவாசை அன்று தைரியங்களையும் , ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய ஸ்ரீ
மஹா ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடும் விதத்திலும் ராகுகேது தோஷங்கள் அகலவும், பித்ரு தோஷங்கள் அகலவும் போட்டி பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் தொழில் உத்தியோகம், அபிவிருத்தி அடையவும் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம் நடைபெறுகிறது.


மேற்கண்ட அனைத்து ஹோமங்களும் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஞாயிறு காலை 10.00 மணியளவில் யாகசாலை பூஜையுடன் துவங்க உள்ளது.இந்த ஹோமத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், பட்டு வஸ்த்திரங்கள், சித்ரா அன்னம், திருஷ்டி நீக்கும் பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது..இதில்மாணவ மாணவிகள் திருமணத்தடை நீங்கும் பெண்கள் மற்றும் கல்வி  நிறுவனர்கள், பொது மக்கள் வியாபாரிகள், ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.