கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, December 30, 2017
Friday, December 29, 2017
சமத்துவ பொங்கலும் சமய நூல் வழங்கும் விழாவும்....
தன்வந்திரி பீடத்தில் சமத்துவ பொங்கலுடன்
சமய நூல் வழங்கும் விழா
தன்வந்திரி
பீடத்தில் 14 ம் ஆண்டு சமத்துவ
பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா வருகிற 14.01.2018 ஞாயிற்று
கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற
உள்ளது.
பண்டைய
காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது
என்பது அனைத்து மக்களிடமும் இருந்து
வந்தது. படித்த அந்த கருத்துக்களை
பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக
சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.
ஆனால்
இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது.
தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்து விட்டது.
பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுவும் குறைந்து விட்டது
என்றால் அதில் சந்தேகமில்லை.
ஒரு
இளைஞனை நிறுத்தி! நீ குருமார்கள் எழுதிய
புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று
கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும்
நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற
வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட
எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன்
இன்னும் அச்சில் ஏறாத பழைய
ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.
அப்பர்,
சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார்
எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள்,
மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே
போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய
பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான
நுல்கள் இருந்து வருகின்றன. மேலும்
பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும்
உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும்
பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல்
ஒழுக்கமும், மனித நேயமும், மத
நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க
வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் குருவருளுடன் வருகிற தமிழர் திருநாளில் 14.01.2018 ஞாயிற்று
கிழமை நண்பகல் 12.00 மணியளவில்
சமத்துவ பொங்கலுடன் சமய் நூல்கள்
வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த
அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை கயிலை
டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
தெரிவித்தார்.
தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி:
04172-230033 / 230274 / 09443330203
வைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்
தன்வந்திரி பீடத்தில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஆறு மதங்களுக்குரிய
தெய்வங்களையும், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், சித்தர்கள், தவசீலர்கள்
என பல்வேறு வகையான சித்த புருஷர்களையும் பிரதிஷ்டை செய்து உலக நலனுக்காக ஆராதனை செய்து
வருகிறார்.
இப்பீடத்தை
பக்தர்கள் பூலோக வைகுண்டம் என அழைத்து மகிழ்கின்றனர். இத்தகைய சிறப்புகள் பெற்ற தன்வந்திரி
பீடத்தில் இன்று 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) என்பதால் விடியற்காலை
5.00 மணியளவில் மார்கழி மாத பூஜைகள்
நடைபெற்று சொர்க்கவாசல் (பரமபத
வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூல
ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ
தன்வந்திரி பகவான் புறப்பட்டு
வந்து, பரமபத வாசல் வழியாக எழுந்தருளி கோவிந்தா கோவிந்தா என பக்தர்களின் கோஷத்துடன்
ஊர்வலமாக வந்து சொர்கவாசல் மண்டபத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை
தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா
ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற
ஹோமங்கள் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Thursday, December 28, 2017
வைகுண்ட ஏகாதசி - சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்
தன்வந்திரி பீடத்தில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்
நடைபெறுகிறது
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 29.12.2017 வெள்ளிக் கிழமை சுக்லபட்ச ஏகாதசி ( வைகுண்ட ஏகாதசி ) என்பதால்
தன்வந்திரி பீடத்தில் விடியற்காலை
5.00 மணியளவில் சொர்க்கவாசல்
(பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி
நடைபெறுகிறது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள்
ஸ்ரீ தன்வந்திரி பகவான் புறப்பட்டு
வந்து, பரமபத வாசல் சந்நிதியில்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிய உள்ளார். இதனை
தொடர்ந்து காலை 8.00 மணியளவில் அஷ்வாரூடா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம்,
தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற
உள்ளன.
மார்கழி
மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும்,
முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி
வணங்கி வருகிறோம். இந்நாளில்
விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இந்த
பரமபத வாசல் திறப்பு விழா
நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவர்.
கலியுகத்தில்,
நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர்
யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு
இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை
அறிந்த நம்மாழ்வார், "எனக்கு மட்டும் வைகுண்ட
வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து
தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும்
வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று
பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத
சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார்
மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட
ஏகாதசியாக- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது
என்பர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும்...
தன்வந்திரி பீடத்தில்
சிவலிங்க ரூபமாக உள்ள
468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும்
ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும் நடைபெற்றது.
பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 75 சன்னதிகள், சிவலிங்கரூபமாக
468 சித்தர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து உலக மக்களுக்கு நிவாரணம்
வேண்டி ஹோம வழிபாடு செய்து வருகிறார். குரு பீடமாக பக்தர்களால் போற்றும் விதத்திலும்
சித்தர்கள் பீடமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம்
வேலூர் வாலாஜாபேட்டையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கலி காலத்தில் அழியாமல் இருக்க ஐம்பத்திநான்கு
கோடி தன்வந்திரி மஹா மந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான புனித மையம் என்ற பெருமை இத்தலத்திற்கு
உண்டு. இந்த பீடம் ஒளஷத பீடமாக அமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்ற பெயருடன் இறைவன்
பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என்பதாகும்.
இறைவனுக்கும், இறைவிக்கும் அருகில் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக அருள்பாவித்து வருகிறார்கள்.
இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பீடத்தில்
இன்று மார்கழி மாதம் 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
உலக நலன் கருதியும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு புனர்பிரதிஷ்டையும் ருத்ர
ஹோமத்துடன் ருத்ராபிஷேகமும் நடைபெற்றது. இன்று காலை 6.00 மணிக்கு கோ பூஜையுடன் யாகசாலை
பூஜைகள் தொடங்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வேத் விற்பனர்கள் கலந்து கொண்டு ருத்ர
ஹோமம் செய்தனர். தன்வந்திரி பீடத்தில் சிவ லிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும்
அஷ்ட பந்தன மருந்து சார்த்தப்பட்டு காலை 11.30 மணியளவில் மஹா பூர்ணாஹுதி நடைபெற்று
மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. ஒரு சிவ லிங்கத்திற்கு ஒருவர் என்ற முறையில்
468 பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் ஸ்தாபகர்
மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றனர். பின்பு பங்கேற்ற பக்தர்கள்
அன்ன பிரசாதங்களை பெற்று சென்றனர். இதில் சுற்றுபுற நகர கிராம மக்கள், ஓம் சக்தி பக்த்தர்கள்,
தன்வந்திரி குடும்பத்தினர் என ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tuesday, December 26, 2017
468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டை - ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்
தன்வந்திரி பீடத்தில்
சிவலிங்க ரூபமாக உள்ள
468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும்
ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி
பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக
நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு
நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.
ருத்ர
ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :
சிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில்
ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு
பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.
ஸ்ரீ ருத்ரம் – சமகம், வேத இலக்கியத்திலும்
வைதீக பாரம்பரியத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.
வித்யைகளில் மேலானது வேதங்கள். வேத மந்திரங்களிலேயே
மேலானது ருத்ரஏகாதசி; ருத்ர மந்திரங்களிலேயே மேலானது பஞ்சாக்ஷரீ (நமசிவாய).
நமசிவாய என்ற மந்திரத்திலேயே சிவா என்ற இரண்டெழுத்து
மேலானது. மரத்தின் வேரில் ஊற்றப்படும் நீரானது, எல்லாக் கிளைகளுக்கும் பரவி அம்மரத்தையே
செழிக்கச் செய்வது போல், ருத்ர ஜபத்தின் மூலம் ஸ்ரீ ருத்ர தேவனை வழிபடும்போது அனைத்து
தேவர்களும் திருப்தியடைகிறார்கள். இது அனைத்து பாவங்களிலிருந்து விடுவிக்கும் சிறந்த
பிராயச்சித்த ஹோமமாகவும், மேலான விருப்பங்களை அடைவதற்காகச் செய்யப்படும் ஆன்மீக சாதனையாகவும்
இருக்கிறது.
ருத்ர ஜபத்தால் எல்லாத் தேவதைகளுமே திருப்தியடைகிறார்கள்
என்றும், நம்முடைய நேர்மையான பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ர ஹோமம் நடைபெற்று 468 சித்தர்களுக்கு ருத்ராபிஷேகம் நடைபெற
உள்ளது. இந்த ஹோமத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டு சித்தர்கள் அருள்பெற
பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Wednesday, December 20, 2017
Tuesday, December 19, 2017
சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்.
தன்வந்திரி பீடத்தில்
சனிப்பெயர்ச்சி மஹா யாகமும்
காலச்சக்ர பூஜையும்.
இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 4ம் தேதி மார்கழி மாதம்
செவ்வாய் கிழமை 19.12.2017 காலை சனி பகவான்
விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியானதை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00
மணிக்கு யாகசாலை பூஜை, 08.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 09.00 மணிக்கு கலச பூஜை
போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம்,
மற்றும் சனி தோஷ நிவர்த்தி பூஜையுடன் சனிபெயர்ச்சி யாகம் நடைபெற்று 27 நக்ஷத்திரங்களுக்கு உரிய
விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று வன்னி
விருட்சத்திற்கு சிறப்பு பூஜையுடன் காலச்சக்ர பூஜையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சனியால் உண்டான
பாதிப்புகள் குறைய ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட்டது.
இதில் ரிஷபம், மிதுனம், கன்னி,
விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள் சங்கல்பம்
செய்துகொண்டனர். இந்த யாகத்தில் ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி சேர்மன் திரு
D.L. பாலாஜி அவர்கள், திரு. ஜகத் ஜீவன் ராம், கோவை கிரிஜா சம்பத் குமார், தன்வந்திரி
பீட அறங்காவலர்கள், மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக பக்தர்கள்
பங்கேற்றனர்.
இந்த
யாகத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற தன்வந்திரி பகவான் டாலர், புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் 2018 தினசரி காலண்டர் வழங்கி
ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக சென்னை பிரபல
ஜோதிடர் திரு ஆதித்ய குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Monday, December 18, 2017
அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில்
அமாவாசை யாகத்துடன்
ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழாவும்
திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைபடி டிசம்பர் மாதம் 17ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை
முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி
ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை
யாகம் நடைபெற்றது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும்
செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை,
வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலியும், ஆண் பெண் திருமணம் நடைபெற
வேண்டியும், குடும்பக்ஷேமம் வேண்டியும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு
திருக்கல்யாணமும் நடைபெற்றது.
மார்கழி
மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில்
அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில்
மட்டுமில்லை, பல புராணங்களிலும்
உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில்
ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.
எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம்
மக்களிடையே உண்டு.
ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
எல்லோரையும் கலங்கச் செய்யும்
சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச்
செய்தார். இதனால் சனி தோஷத்தினால்
பாதிக்கப்பட்டவர்கள் இவரை
வழிபடுவது சிறப்பு. அனுமன் அவதார நாளான இன்று
இப்பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம்
நடைபெற்றது. இந்த வைபவத்தில்
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)