தைலாபிஷேகத்தின் மகத்துவங்கள்…
ஸ்வாமிகள் தன்வந்திரி மூலவருக்கு தைலாபிஷேகம் செய்யும் காட்சி |
தன்வந்திரி
பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 28ஆம் தேதி தன்வந்திரி மகா மந்திரங்களை கைப்பட எழுதி
அனுப்பும் பக்தர்களின் அனைத்து விதமான ப்ரார்த்தனைகளும் நிறைவேறும் பொருட்டு 27 நட்சத்திர
சாந்தி ஹோமம் செய்து, மகா மந்திர ப்ரதிஷ்டையை திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
இதனைத்
தொடர்ந்து மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை தைலாபிஷேகம்
எனும் வைபவம் உலக மக்களின் உடற்பிணி உளப்பிணி நீங்க நடைபெற்று வருகிறது. அந்த வகையில்
இந்த ஆண்டு 2014 நவம்பர் 28ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை
வரை மூலவருக்கு தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷகம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி
வரை நடைபெறும்.
இந்த
வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு சனி தசை, சனி புக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனி
கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்யம் பெற வழிவகை கிடைக்கும். மேலும்
நவக்கிரஹங்களால் ஏற்படும் தடைகள் நீங்கி நன்மைகள் பெற வாய்ப்புகள் கிட்டும். மருத்துவ
ரீதியான தோஷங்களும் நீங்க செய்யும். மேலும் பல நன்மைகள் கீழ்கண்டவாறு அமையும்.
நினைக்கின்ற
காரியம் நிறைவேறும், குடும்பம் நலம் பெறும், ஆயுள்
, புத்திர விருத்தி ஏற்படும்,
வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும், எட்டுவித செல்வம் கிடைக்கும், நோய்கள்
நீங்கும், பாபங்கள் நீங்கும், உடல் நலம் பெறும்,
வாழ்வு இன்பமயமாகும், பயிர்கள் செழிக்கும், ராஜபோக வாழ்வு கிட்டும்,
வசீகரம் ஆகிய பலன் தரும், மற்றும்
பயம் நீக்கவும் செய்கிறது , சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து,
இதய நோய் வராமல் தடுக்கிறது.
அதிகப்படியான மக்னீசியம்,
இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை
எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு
வருவதைத் தடுக்கும். ஜிங்க் என்னும் கனிமச்சத்து
அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம்
அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன்
இருக்க வேண்டுமெனில், கால்சியம் கிடைக்க வழி செய்கிறது.
செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். இதில்
மக்னீசியம் இருப்பதால், இரத்த
அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக
இருக்கும்.
27 நட்சத்திர ஹோமத்துடன் மகா மந்திர ப்ரதிஷ்டை |
இத்தகைய
சிறப்பு வாய்ந்த தைலாபிஷேகத்தில் பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள்பெற வேண்டுகிறோம்.
இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
குறிப்பு
: அபிஷேகத்தில் பங்கேற்பதற்கும், அபிஷேகம் செய்த தைலத்தை பெறுவதற்கும் விருப்பமுள்ளவர்கள்
அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment