வாலாஜாபேட்டை,
பிப்ரவரி 12ம் தேதி காலை 9.30 மணியளவில் தன்வந்திரி பீடத்தின் அருகில் அமைய இருக்கிற
27 அடி உயர ப்ரத்யங்கிரா தேவி மகா பீடத்தின் பூமி பூஜையானது கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த
வைபவத்தை பெங்களூர், ஸ்ரீ அதர்வண மகா ப்ரத்யங்கிரா சித்தர் பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ
சப்தகிரி அம்மா அவர்கள் தலைமை தாங்கினார். வேலூர் வனதுர்கா பீடத்தின் பீடாதிபதி துர்கா
பிரசாத் ஸ்வாமிகள், திருவலம் சாந்தா ஸ்வாமிகள், ஓச்சேரி மோகனானந்த ஸ்வாமிகள், வேலூர்
சங்கர் குருஜி, விசாகப்பட்டினம் லலிதாம்பிகா பீடத்தின் பீடாதிபதி ராமானந்தபாரதி ஸ்வாமிகள்,
சென்னை அன்னபாபா ஸ்ரீமதி மற்றும் அனந்தலை பஞ்சாயத்து தலைவர் A.M.வெங்கடேசன், வாலாஜா
சேர்மன் வேதகிரி, நகரமன்ற உறுப்பினர் W.G.முரளி, தொழிலதிபர் மகேந்திரவர்மன், J.லட்சுமணன்,
அண்ணாமலை அறக்கட்டளை உறுப்பினர் சரவணன், பென்ஸ் பாண்டியன் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள்
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும்
பீடத்தில் மகா காளி யாகம் நடத்தப்பட்டு யாகத்தின்போது மகா பீடத்தின் முக்கோண வடிவ யந்திரத்திற்கு
அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பூமி பூஜையின்போது யந்திரத்தை ப்ரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் வந்திருந்த அனைவரும் பீடத்தில் அமைந்துள்ள தன்வந்திரி பகவானையும், இதர 69 தெய்வங்களையும்,
லிங்க வடிவிலான 468 சித்தர்களையும் சுற்றி சேவித்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து
அன்னதானமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment