சுக்ரன்,
களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி
அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம்
ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை
குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு
உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே
காரகன் என்பதால், புது வாகன யோகமோ
அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
கொடுக்கல் வாங்கலில் பகை ஏற்படும்,
பல பெண்களால் அவமானம் ஏற்படும், சுகங்களில் குறைவு ஏற்படும். லட்சுமி கடாட்சம் குறையும்.
மேலும்
உடல் ரீதியாக முதுகுத்தண்டுவட உபாதை,
கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு
பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன்
வழி அல்லது மனைவி வழி
உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற ப்ரச்னைகள் வராமல் இருக்கவும்,
சுக்ர தசை, சுக்ர புக்தி, ஜாதகத்தில் 3,6,8,12, ஆகிய இடங்களில் சுக்ரன் அமைந்தவர்களுடை
தோஷங்கள் அகலவும், மேலும் பலவிதமான தோஷ நிவர்த்தி பெற வேண்டி 8.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை
10.00 மணியளவில் சுக்ர சாந்தி ஹோமம் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் தமிழகம் மற்றும்
பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர்
பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment